வணக்கம்!
திருவள்ளுவா் ஆண்டு 2045
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
தங்கத் தமிழ்போல் தழைத்து!
பொங்கல் திருநாள் புலரட்டும் பன்னலங்கள்
திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!
பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்மலராய்
உங்கள் மனமும் ஒளிர்ந்து!
பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!
பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழாய்ச் சமைத்து!
பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
கங்குல் நிலையைக் கழித்து!
பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
எங்கும் பொதுமை
இசைத்து!
பொங்கல் திருநாள்
புதுக்கட்டும் சாதிமதம்
தொங்கும் உலகைத் துடைத்து!
தொங்கும் உலகைத் துடைத்து!
பொங்கல் திருநாள் புகுத்தட்டும் வாய்மறையை!
தங்கும் அறங்கள் தழைத்து!
பொங்கல் திருநாள் புசிக்கட்டும் சீா்கம்பன்
செங்கனித் தோப்பில் திரிந்து!
14.01.2014
வணக்கம்
RépondreSupprimerஐயா.
பொருள் ஓடு இசைபாடும் பொங்கல் கவிதை எம்மனதை நெகிழவைத்தது... சிறப்பாக உள்ளது.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
RépondreSupprimerவணக்கம் !
RépondreSupprimerஇனிய தைப் பொங்கல் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா !
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு
மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக மலர்ந்திட என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
RépondreSupprimerஇனித்திடும் தமிழர் புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்!!!
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்
RépondreSupprimerஇனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!!.
RépondreSupprimerவணக்கம் ஐயா!
RépondreSupprimerபொங்கலென்று கூறியே புத்தாண்டைப் போற்றுவோம்
எங்கணுமே எம்குரலே என்று!
இனித்திடும் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள் ஐயா!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து
RépondreSupprimerவணக்கம் ஐயா!
RépondreSupprimerஇனிய தமிழ்ப் புத்தாண்டு & பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
Alexis
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா
RépondreSupprimerஎன் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்......!
RépondreSupprimerஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்/
RépondreSupprimerஇனிய கவிதைக்கு நன்றி,.பொங்கல் வாழ்த்துகள் ஐயா!
RépondreSupprimerஅன்பிற் சிறந்த ஐயா வணக்கம்
RépondreSupprimerகுறள்வெண்பா வழியாகத் தந்த வாழ்த்து இனித்தது.
குறள்வெண்பா வடிவும் தங்கள் வசமாகியுள்ளது.
தொடர்ந்து பல குறட்பாக்கள் தர அன்புடன் வேண்டுகின்றேன்.
வெண்பா வடிவில் வியன்தமிழ் நல்கிடும்
பண்பாளர் போற்றுவன் பார்!
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
அன்புள்ள கவிஞருக்கு
RépondreSupprimerவணக்கம்
பொங்கல் நல வாழ்த்துகள்!!
பத்துக் குறள்களில் பாங்காய் வழங்கிய
அத்தனை வாழ்த்தும் அமிழ்து!
நன்றியன்
பெஞ்சமின்
RépondreSupprimerஅன்புடையீர்,
வணக்கம். கரி நாளான கனு மாட்டுப் பொங்கலன்று என்னை நினைவு கூர்ந்து வாழ்த்தியமைக்கு நன்றி. கடந்த பொங்கலைப் போல உழவர் திருநாளும் தங்கள் அனைவருக்கும் இனிமையையே அள்ளி வழங்கட்டும்!
திருமதி சிமோன்
RépondreSupprimerஅன்பின் கவிஞர் கி பாரதிதாசன் அவர்களே !
அருமையான கவிதை - பொங்கல் திரு நாள் கவிதை - இரசித்துப் படிக்கத் தூண்டும் கவிதை - பொழியட்டும் - புலரட்டும் - பொலியட்டும் - புகழட்டும் - புனையட்டும் - புடைக்கட்டும் - பொருத்தட்டும் - புதுக்கட்டும் - புசிக்கட்டும் - என்ன அருமையான சொற்கள் - சிந்தனை நன்று -
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக் கவிதை நன்று நன்று
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
RépondreSupprimerஇனித்திடும் பொங்கல்,
தனித்தமிழ்ப் புத்தாண்டு2045
நல்வாழ்த்துக்கள்!
முனைவர் க.தமிழமல்லன்