நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்
வணக்கம்!
கோடிக் கோடிப் பலகோடி
கூட்டை
மாற்றிப் பறந்தோடும்!
ஆடிப் பாடிப் பகலிரவை
ஆளும்
ஊழல் தொடா்கிறது!
நாடிச் செய்யும் திட்டமெலாம்
நாட்டைச்
சுரண்டும் நரிச்செயலே!
வாடி வதங்கும் என்மக்கள்
வாழ்க்கை
வாழ்தல் எந்நாளோ?
-----------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
உருண்டு பிரண்டும் உடல்உயிரை
உருக்கும்
காதல் கவி..படித்தேன்!
இருண்டு போகும் வரிகளினால்
இந்த
விருத்தம் படைக்கின்றேன்
மருணடு கிடக்கும் மனக்கூட்டில்
மணக்கும்
தமிழை நிரப்பிடுக!
இருந்து வாட்டும் நினைவலைகள்
இன்பத்
தமிழாய்ப் பிறந்திடுமே!
-----------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
ஆற்றெழும் ஆசைகளை அள்ளி அளிக்கும்..பா
ஊற்றெழும் வண்ணம் உடைத்து!
-----------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
இனிய தமிழின் புத்தாண்டை
இயம்பிக்
களிக்கும் என்தோழா!
கனிய வேண்டும் தமிழாட்சி!
கமழ
வேண்டும் தமிழ்மாட்சி!
குனியக் குனிய நம்பகைவா்
கொட்டி
மகிழ்வார்! அவா்அழிய
இணைய வேண்டும் தமிழ்மக்கள்!
இன்பப்
பொங்கல் வாழ்த்துக்கள்!
-----------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
ஊக்கு விற்கும் தொழிலாளி
ஊக்கம்
ஊட்ட ஆளிருந்தால்
தேக்கு விற்கும் உயா்நிலையைத்
தேடிப்
பெற்று மகிழ்ந்திடுவான்!
பாக்கு கொண்ட வன்மையெனப்
பாக்கள்
படைக்கும் அகமதுவே!
கேக்கு போன்றே உன்வலையைக்
நோக்கி
இனிமை சுவைத்தனனே!
-----------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
தாமரைப் படத்தை இட்டுத்
தமிழ்மணம்
நல்கும் தோழி!
நாமரைச் செல்வி உன்னுள்
நடமிட
நன்றே வாழி!
மாமறைக் கண்ணன் தாளை
மனமுற
பாடும் உன்னைப்
பாமறை தீட்டும் நானும்
பணிவுடன்
வணங்கு கின்றேன்!
புனைந்திடும் பக்கம் யாவும்
புகழ்த்தமிழ்
மாண்பைப் போற்றும்!
அணிந்திடும் அணியைப் போன்றே
அழகுற பேரைத் தீட்டும்!
இணைந்திடும் தோழி தோழா்
இயம்பிடும்
வண்ணம் காண்க!
இனித்திடும் பொங்கல் வாழ்த்தே!
இன்புற
வாழ்க வாழ்க!
-----------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
அம்மா நீயும் வருவாயா!
அன்பை மீண்டும் தருவாயா!
சும்மா சொல்லக் கூடாது
சுரக்கும் அன்பின் தலைப்பிதுவே!
கும்மாங் குத்தாம் ஆட்டங்கள்
கொடுக்கும் மகிழ்வை எய்துகிறேன்!
இம்மா நிலத்தில் முதற்சொத்தாம்
ஈன்ற தாயின் கருவறையே!
கண்ண தாசன் பெயா்சூடிச்
கன்னல் பொங்கும் கவியாழி!
உண்ணத் தெவிட்டாச் செந்தமிழாம்
உணவைப் பொங்கும் உயா்தாழி!
எண்ண மெல்லாம் நிறைவேற
எழுதும் உன்றன் தமிழ்வாழி!
வண்ணப் பாட்டின் வளமாக
வாழ்க! வாழ்க! பல்லுாழி!
-----------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
உசிரும் உருகுதய்யா
ஒம்பாட்டைப் படிச்சதனால்!
பசியும் பெருகுதய்யா
பைந்தமிழைக் குடித்ததனால்
-----------------------------------------------------------------------------------------------
13.01.2013
பைந்தமிழைக் குடித்தவர் நீர்
RépondreSupprimerபாட்டு பெருகிக் கொண்டேதான் இருக்கும்
நன்றி ஐயா
த.ம.2
வணக்கம்
RépondreSupprimerஐயா.
இன்று காலையில் வலைப்பூக்களை திறந்த போது தங்களின் கவிப்பூக்கள் முதலில் மனதுக்கு இதமாக வீசியது... அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
RépondreSupprimerஐயா.
த.ம 3வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அனைத்தும் அருமை
RépondreSupprimerஅனைத்தும் அருமை ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
RépondreSupprimerஅத்தனையும் மிக அருமை!
RépondreSupprimerவாழ்த்துக்கள் கவிஞரே!
வணக்கம் !
RépondreSupprimerவலைப் பூக்களில் தங்களின் கவிப் பூக்கள் மென்மேலும்
சிறந்து விளங்க வாழ்த்துக்கள் ஐயா .
அன்பும் அறமும் கொண்டவரே
RépondreSupprimerஅழியா தமிழை தந்தவரே
உன்பா கண்டே மகிழ்கின்றேன்
உள்ளம் நிறைந்து நெகிழ்கின்றேன்
இன்னல் இல்லா வாழ்வதனை
இறைவன் உமக்கு நல்கட்டும்
என்போல் கிறுக்கும் இளையோரும்
என்றும் உமக்காய் தொழுவோமே ..!
அழகோ அழகு கவிஞரே
படித்தேன் ரசித்தேன் பயன்பெற்றேன் அண்ணா
வாழ்க வளமுடன்
அருமையான பா தொடரட்டும் கவிப்பூ.
RépondreSupprimerகவிப்பூவில் கட்டிய மலர் மாலை கன்னிப் தமிழ் மணக்கும் கவின்சோலை!
RépondreSupprimerதங்கள் கவிவரிகளுக்குச் சான்று பகிரும் வரிகள்
RépondreSupprimer