நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்
வணக்கம்!
கண்ணீா் சிந்தும் கவிவரிகள்
கவிஞன்
யானும் அழுகின்றேன்!
புண்ணீா் பாய்ந்து கண்சோரப்
புனைந்த
கவிதை! மனம்தங்கும்!
தண்ணீா் போன்றே ஓடுகிற
தன்மை
கொண்ட மொழிபெயா்ப்பு!
தெண்ணீா் காட்டும் முகம்போன்று
திறமாய்ப்
பதிவைப் படைத்தனையே!
12.01.2013
----------------------------------------------------------------------------------------
வணக்கம்!
படமும் பாட்டும் படைக்கின்ற
பாங்கைக்
கண்டு வியக்கின்றேன்!
சுடரும் வண்ணம் கவிதைகளைச்
சூட்டும்
திறனை வாழ்த்துகிறேன்!
படரும் கொடிபோல் மணம்தந்து
படிப்போர்
நெஞ்சைப் பறிக்கின்றாய்!
தொடரும் பதிவை நாள்தோறும்
சுவைத்து
மகிழ வருவேனோ!
12.01.2013
---------------------------------------------------------------------------------------
வணக்கம்!
நிமிட கதையில் நெகிழ்ந்தது நெஞ்சம்
அமிழ்தத் தமிழால் அலா்ந்து!
12.01.2013
---------------------------------------------------------------------------------------
வணக்கம்
புதுகை மணத்தென்றல் பூந்தமிழ் வீசிப்
புதுமை நெறிகளைப் போற்று!
12.01.2013
---------------------------------------------------------------------------------------
வணக்கம்!
சந்திரி அரியார் தந்த
தண்டமிழ்
அமிழ்தை உண்டேன்!
மந்திரச் சொற்கள் கேட்டு
மயங்கிடும்
நெஞ்சம் கொண்டேன்!
சிந்திய வோ்வை யாலே
செழித்திடும்
சோலை போன்று
சிந்தனை யாற்ற லாலே
சிறந்திடும்
சீா்கள் காண்க!
12.01.2013
---------------------------------------------------------------------------------------
வணக்கம்!
கூடாரை வெல்லும்சீா் போவிந்தன் பேருரைத்துப்
பாடிய பாட்டினைப் பாடுகவே! - வாடிய
நெஞ்சம் நெகிழ்ந்தாடும்! துாய திருவடியில்
தஞ்சம் அடையும் தலை!
12.01.2013
---------------------------------------------------------------------------------------
வணக்கம்!
கவிதா பாப்பா கணித்திட்ட
கவிதை
கண்டு களித்திட்டேன்!
தவியாய்த் தவிக்கும் நெஞ்சத்தின்
தாகம்
தணிக்கும் தமிழுற்று!
குவியாய் மலா்ந்த பூங்கொத்துக்
கொடுக்கும்
வாசம் வீசுகவே!
புவியாய்த் தமிழைப் போற்றுகிற
புலவன்
மகிழ்ந்து வாழ்த்துகிறேன்!
12.01.2013
---------------------------------------------------------------------------------------
வணக்கம்
தேனெனச் செந்தமிழைத் தீட்டித் திளைப்பவா்!
ஊனென உற்ற உயிரென வாழ்பவா்!
தானொரு சின்னப் பொடியென்றார்! சாற்றுகிறேன்
வானென வாழ்க வளா்ந்து!
12.01.2013
---------------------------------------------------------------------------------------
வணக்கம்!
பின்னப் பின்னக் கலையின்பம்
பெருகிப்
பாயும் நிலைபோலச்
சின்ன சின்ன சிதறல்கள்
சோ்ந்து
மின்னும் நுாலாக!
எண்ண எண்ணச் சுவைகூடும்!
எழுத
எழுத எழுத்தொளிரும்!
வண்ண தமிழின் திருவருளால்
வாழ்க!
வாழ்க! பல்லாண்டே!
12.01.2013
---------------------------------------------------------------------------------------
வணக்கம்!
நெஞ்சை அள்ளும் வரிகளினால்
நேயத்
தமிழை விளைத்துள்ளீா்!
பஞ்சைப் போன்றே பறக்கின்றேன்
பாட்டைப்
படித்த மயக்கத்தில்!
கொஞ்சும் காதல் கொடியேற்றிக்
கோல
வாழ்வை அடைந்திடுக!
மிஞ்ச வேண்டி வாழ்த்துகிறேன்
மின்னும்
வலையின் உலகினிலே!
12.01.2013
---------------------------------------------------------------------------------------
நெஞ்சை அள்ளும் வரிகளினால்
RépondreSupprimerநேயத் தமிழை விளைத்துள்ளீா்!
பஞ்சைப் போன்றே பறக்கின்றேன்
பாட்டைப் படித்த மயக்கத்தில்!
கொஞ்சும் காதல் கொடியேற்றிக்
கோல வாழ்வை அடைந்திடுக!
மிஞ்ச வேண்டி வாழ்த்துகிறேன்
மின்னும் வலையின் உலகினிலே!
அருமை ரசித்தேன் .....! தோடர வாழ்த்துக்கள்.....!
Supprimerவணக்கம்!
இனியா வருகையை ஏற்றுவந்தேன்! இங்கே
இனியார் இவா்போல் இனிப்பு!
அருமை ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
திண்டுக்கல் பாலனைப்போல் எத்திசை தேடியும்
உண்டோசொல் நன்றே உணா்ந்து?
தேன்சொட்டாய் தித்திக்கும் தெள்ளுதமிழ் உண்டகவி
RépondreSupprimerவான்தொட்டு நிற்கும் வளர்ந்து!
அத்தனையும் அருமை கவிஞர் அண்ணா
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தம 2
Supprimerசீராளன் தீட்டும் செழுந்தமிழ்ப் பாட்டெல்லாம்
பாராளும் இன்பம் படைத்து
அனைத்தும் அருமை.... பகிர்ந்தமைக்கு நன்றி.
RépondreSupprimerத.ம. +1
Supprimerவணக்கம்!
நாகராசா் வந்தால் நறுந்தேன் கவிபாடத்
தாகமளிக்கும் இன்பத தமிழ்!
வணக்கம் ஐயா!...
RépondreSupprimerமஞ்சு எனவே மனங்குளிரச் சிந்தனைப்
பஞ்செனச் சீர்கள் பலஅடுக்கி! - நெஞ்சம்
நிறைக்கக் கவிப்பூக்கள் நித்தமும் கண்டே
உறைந்ததே உள்ளம் உவந்து!
மிக அருமை ஐயா!
என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!
Supprimerவணக்கம்!
உள்ளம் உவக்கின்ற ஒண்டமிழ்ப் பாட்டெல்லாம்
வெல்லம் அளிக்கும் விருந்து
ஒவ்வொரு வலைத் தளத்திலும் அங்கங்கே
RépondreSupprimerஅவர்கள் பதிவிடும் பதிவுகளின் சிறப்பை
உங்கள் பாக்களால் உணர முடிகிறது.
மிக அருமை அத்தனை கவிதை வாழ்த்துக்களும்!
இனிவரும் காலங்களில் கூடவே
அவரவர் வலைத் தளத்தையும் கடைசியில் ஒரு வரி சேர்த்துவிடுங்கள்.
அவர்களுக்கும் புதிதாகப் பார்ப்பவர்களுக்கும் கூடுதல் மகிழ்வாக இருக்கும்!
வாழ்த்துக்கள் கவிஞரே!
Supprimerஉங்கள் கருத்தை உவந்து வரவேற்றல்
சங்கத் தமிழரின் சால்பு
அருமையான கவிதைப்பாக்கள் ஐயா.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
தனிமரமே! தண்டமி்ழ் பூத்துத் தழைக்கும்
கனிமரமே! வாழ்க கமழ்ந்து!
வணக்கம்
RépondreSupprimerஐயா.
ஒவ்வொரு கவிப்பூக்களும் சிறப்பாக உள்ளது ..வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
நல்ல செயல்களை நன்றே புரிகின்ற
வல்லதமிழ் ரூபனை வாழ்த்து!
ஐயா அனைத்தும் அருமை. அனைவருக்கும் வாழ்த்துகள்.
RépondreSupprimer
RépondreSupprimerநண்பா்தம் மின்வலையில் நல்கிய பாக்களைப்
பண்புடன் இங்குப் படைத்தனையே - தொண்டில்
சிறந்தோங்கும் செங்கவி பாரதியே! உன்னால்
நிறைந்தோங்கும் இன்பம் நிலத்து!