அச்சம் தவிர்
தமிழ் வணக்கம்
கவிதைக் கதவைத்
திறந்திங்குக்
கைகள் கூப்பி
அழைக்கின்றேன்!
சுவையை நல்கும் சுடர்த்தமிழே
அவையை மணக்கச் செய்திடுக!
செவியைத் திறந்து வைத்திடுவீர்
செந்தேன் பாயும்
குளித்திடுவீர்!
புவியைப் புரட்டும்! நற்பாக்கள்
புனையும் பொற்கோல்! போற்றிடுவீர்!
இறை வணக்கம்!
தேனார் பொழில்சூழ் அரங்கத்தில்
திண்கை தாங்கிப் படுத்தவனே!
வானார் அளவில் இனிமையினை
வளமார் தமிழில் தொடுத்தவனே!
கூனார் என்றன் நெஞ்சத்துள்
குணமார் கவிதை
கொடுத்தவனே!
நானோர் படியாய் இருந்துன்றன்
நற்றாள் அமுதைச் சுவைப்பேனே!
அவை வணக்கம்!
நற்றேன் அருட்பா அரங்கத்தை
நான்காம் திங்கள் தொடர்கின்றோம்!
கற்றோம் கம்பன்
கவிதைகளை!
கண்டோம் குறளார் கற்கண்டை!
உற்றோம் வடலூர்
உயரமுதை!
உணர்ந்தோம் வாழ்வின் நோக்கத்தை!
சொற்றேன் நல்கும் கவிஞன்யான்
சொன்னேன் வணக்கம்! ஏற்றிடுவீர்!
ஓசை முழங்கும் அருஞ்சொற்கள்
ஒளிரும்
ஆத்தி சூடியினை
மீசைக் காரப் பெரும்புலவன்
ஆசைக் கொண்டு
அளித்திட்டான்!
ஊசை நாற்ற மாந்தர்களின்
மாசைத் துடைத்துக் கூத்திட்டான்!
பூசை என்ன? புலியென்ன?
அச்சம் தவிர்த்து நிற்பாயே!
அச்சம் தவிர்ப்பாய் எனும்தலைப்பில்
அஞ்சாக் கவிதை
அரங்கத்தை
உச்ச மாகப் பாடிடவே
உங்கள் கவிஞர்
வருகின்றார்!
கச்சம் அணிந்த கன்னியெனக்
கவிதை மின்னும்! என்னிடத்தில்
மிச்சம் சரக்கு
இருக்குமெனில்
மீண்டும் வருவேன்! வாழ்த்திடுவீர்!
தொடரும்
04.01.2014
வணக்கம்
RépondreSupprimerஐயா.
ஒவ்வொரு வரிகளும் ரசிக்கும் படி மிக அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள் ஐயா.
த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
அச்சம் அகற்றிடுக! அன்பை அளித்திடுக!
மெச்சும் உலகே வியந்து!
//மிச்சம் சரக்கு இருக்குமெனில்
RépondreSupprimerமீண்டும் வருவேன்! வாழ்த்திடுவீர்!//
அள்ள அள்ள வற்றாத ஊற்றல்லவா தங்களின் தமிழ்
Supprimerவணக்கம்!
அருந்தமிழ் ஆரமுதை அள்ளிக் குடித்தால்
பெரும்நலம் மேவும் பிணைந்து
கற்றோம் கம்பன்கவிதைகளை!
RépondreSupprimerகண்டோம் குறளார் கற்கண்டை!
உற்றோம் வடலூர்உயரமுதை!
உணர்ந்தோம் வாழ்வின் நோக்கத்தை!
சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
Supprimerவணக்கம்!
நோக்கத் தெளிவுறுக! பூக்கும் நலவாழ்வு!
தாக்கும் தடையைத் தகா்த்து
வீரமிகு வரிகள் அனைத்தும் சிறப்பு... வாழ்த்துக்கள் ஐயா...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!!
வீரம் விளைகின்ற சீரார் கவிபடித்தால்
ஆரமுதம் ஊறும் அகத்து
வணக்கம் !
RépondreSupprimerசெந்தேனாய் உள்ளத்தில் உறைந்து நிற்கும் இன்பக் கவிதைகள்
இனிதே தொடர வாழ்த்துக்கள் ஐயா .
Supprimerவணக்கம்!
செந்தேன் சுரந்திடவும் சிந்தை மணந்திடவும்
தந்தேன் கவிதை தழைத்து!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerதிருவருட் பாவரங்கத் தேன்சுவை சொட்டு!
உருவேற்றும் உண்மை உணர்வு!
அருமையான தேன்சுவைக் கவிக்கடலில் மூழ்கிட வந்தோம்.
தொடருங்கள்...
பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!
Supprimerவணக்கம்!
திருஅருட்பாத் தேனுண்டு சீருடன் வாழ்க!
அரும்பெரும் சோதியில் ஆழ்ந்து
சிறந்த பகிர்வு
RépondreSupprimerதொடருங்கள்
படிப்பதற்கு நாம் வருவோம்
Supprimerவணக்கம்!
சிறந்த பதிவென்று செப்பீனீா்! நன்றி!
திறந்த மனத்தால் தெளிந்து!
அருமையான கவிதை...
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா....
Supprimerவணக்கம்!
கவிஞன்என் பாக்களைக் கண்டு களிப்பார்
சுவைஞா் குமார்எனச. சொல்லு
அச்சம் தவிர்ப்பாய் எனும்தலைப்பில்
RépondreSupprimerஅஞ்சாக் கவிதை அரங்கத்தை
உச்ச மாகப் பாடிடவே
உங்கள் கவிஞர் வருகின்றார்! வாருங்கள் கவிஞரே வாருங்கள்!
இன்னிசை விருந்து அளிக்கின்றீர்
விருப்புடன் உண்டு களிக்கின்றோம்
பச்சை தமிழர் நாமெல்லாம்
பருகிடத் தானே வளர்கின்றோம்.
Supprimerவணக்கம்!
பச்சைத் தமிழா் படா்ந்த மனத்துள்ளே
அச்சம் புகுமோ அரண்டு!
அச்சம் தவிரென்ற அண்ணாவின் தேன்கவிகள்
RépondreSupprimerஉச்சம் தலைமீது ஊறியதே - நிச்சயமாய்
பொன்னெழுத்துப் போல்மண்ணில் பூத்திருக்கும்! அன்பாக
என்நாவில் ஏற்றம் எடுத்து !
அனைத்தும் அருமை அற்புதம்
ரசித்தேன் அழகாய் !
வாழ்த்துக்கள் கவிஞர் அண்ணா வாழ்க வளமுடன்
9
Supprimerவணக்கம்!
அண்ணாவின் அந்தமிழை அள்ளி அருந்திடுக!
பண்ணாவில் பற்றிப் படா்ந்திடுமே! - வண்ணான்போல்
நாட்டின் அழுக்ககற்றி நற்றும்பைக் காடாக
ஏட்டின் எழிலை எழுது!
RépondreSupprimerஅச்சம் தவிர்என்[று] அளித்த கவிபடித்தால்
உச்சம் அடைந்தே உணா்வூறும்! - துச்சமென
வந்த பகைவரின் வாலறுக்கும்! நெஞ்சே..நீ
தந்த தமிழைத் தரி
Supprimerவணக்கம்!
தந்த கவியைத் தரியென்று தந்தகவி
சிந்தை நிறைந்து செழித்தோங்கும்! - விந்தைமிகு
சந்தக் கவியே! தமிழ்ச்செல்வா! வாழ்த்துகிறேன்
சொந்த உறவெனச் சூழ்ந்து!