திசைகளை மாற்றிய தென்னவன்!
திருக்குவளை,
தமிழர்களின் கிழக்கு!
அங்குதான்
தமிழர்களின் இருளகற்றும்
சூரியன் தோன்றியது.
வங்கக் கடற்கரை,
தமிழர்களின் மேற்கு!
அங்குதான்
தமிழ் ஆதவன்
பள்ளி கொண்டது!
அறிவாலயம்
தமிழர்களின் தெற்கு!
அங்குதான்
தமிழன்னை
ஆட்சி புரிந்தாள்!
குமரி முனை
தமிழர்களின் வடக்கு!
அங்குதான்
வடவேங்கடனைப் போன்று
ஈரடியால் உலகளந்த
எங்கள்
வள்ளுவர் வாழ்கின்றார்!
நேர்வாக்கு இட்ட தலை
பெண்ணுரிமை காத்த
அர்த்தநாரீசர்!
தலை முடிகள்!
கதிரவன் கொண்ட கதிர்கள்!
மூளை! - தமிழ்ச்
சோலை!
நெற்றி!
தமிழரின் விதியை
முற்றும் மாற்றிய சாசனம்!
கனல் பறக்கும்
கண்கள்! - அதன்
சூட்டில் பிறக்கும்
முரசொலிக்கும் பண்கள்!
மூக்கு!
புலிகளின் குகை!
காது!
அறிவுப் பேழையின்
திறவுகோல் துளை!
அனல் பறக்கும் திருவாய்!
உலக அதிசயம்!
மேடைகள்தோறும் - தமிழ்
ஆடைகள் தைத்ததால்,
அடுக்கு மலைபோல்
பகையைத்
தடுக்கும் உரையைக் கொடுத்ததால்,
வினா முடியும் முன்னே
விடையை அளித்ததால்
அனல் பறக்கும் திருவாய்!
உலக அதிசயம்!
வாய்!
பாவலருக்கும்
நாவலருக்கும்
தாய்!
நாக்கு!
நற்றமிழ்த் தாய்
அணிந்த மிதியடி!
பற்கள்!
சொற்கள்
விளையாடும் கற்கள்!
உதடுகள்!
உயர்தமிழ் ஆலயக்
கதவுகள்!
தோள்கள்!
பகை தடுக்கம் அரண்கள்!
கைகள்!
எழுதிச் சிவந்ததால்
வள்ளலை நிகர்த்தன!
விரிந்த விரல்கள்
பரிதியின் புகைப்படம்!
நெஞ்சம்!
எதையும் தாங்கும்
இமயத்தை விஞ்சும்!
இதயம்!
இன்பத் தமிழ் வாழும்
இல்லம்!
வயிறு
மூடப் பழக்கக் கழிவுகளை
முற்றும் வெளியேற்றிய
இயந்திரம்!
தாள்கள்!
தமிழ் மண்ணை
உழுத ஏர்கள்!
கலைஞர்
எங்கள் நெஞ்சங்களில்
எப்போதும் வாழ்வார்!
தமிழுக்குத் தொல்லையெனில்
உயிர்கொண்டு எழுவார்!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.08.2018
திருக்குவளை,
தமிழர்களின் கிழக்கு!
அங்குதான்
தமிழர்களின் இருளகற்றும்
சூரியன் தோன்றியது.
வங்கக் கடற்கரை,
தமிழர்களின் மேற்கு!
அங்குதான்
தமிழ் ஆதவன்
பள்ளி கொண்டது!
அறிவாலயம்
தமிழர்களின் தெற்கு!
அங்குதான்
தமிழன்னை
ஆட்சி புரிந்தாள்!
குமரி முனை
தமிழர்களின் வடக்கு!
அங்குதான்
வடவேங்கடனைப் போன்று
ஈரடியால் உலகளந்த
எங்கள்
வள்ளுவர் வாழ்கின்றார்!
நேர்வாக்கு இட்ட தலை
பெண்ணுரிமை காத்த
அர்த்தநாரீசர்!
தலை முடிகள்!
கதிரவன் கொண்ட கதிர்கள்!
மூளை! - தமிழ்ச்
சோலை!
நெற்றி!
தமிழரின் விதியை
முற்றும் மாற்றிய சாசனம்!
கனல் பறக்கும்
கண்கள்! - அதன்
சூட்டில் பிறக்கும்
முரசொலிக்கும் பண்கள்!
மூக்கு!
புலிகளின் குகை!
காது!
அறிவுப் பேழையின்
திறவுகோல் துளை!
அனல் பறக்கும் திருவாய்!
உலக அதிசயம்!
மேடைகள்தோறும் - தமிழ்
ஆடைகள் தைத்ததால்,
அடுக்கு மலைபோல்
பகையைத்
தடுக்கும் உரையைக் கொடுத்ததால்,
வினா முடியும் முன்னே
விடையை அளித்ததால்
அனல் பறக்கும் திருவாய்!
உலக அதிசயம்!
வாய்!
பாவலருக்கும்
நாவலருக்கும்
தாய்!
நாக்கு!
நற்றமிழ்த் தாய்
அணிந்த மிதியடி!
பற்கள்!
சொற்கள்
விளையாடும் கற்கள்!
உதடுகள்!
உயர்தமிழ் ஆலயக்
கதவுகள்!
தோள்கள்!
பகை தடுக்கம் அரண்கள்!
கைகள்!
எழுதிச் சிவந்ததால்
வள்ளலை நிகர்த்தன!
விரிந்த விரல்கள்
பரிதியின் புகைப்படம்!
நெஞ்சம்!
எதையும் தாங்கும்
இமயத்தை விஞ்சும்!
இதயம்!
இன்பத் தமிழ் வாழும்
இல்லம்!
வயிறு
மூடப் பழக்கக் கழிவுகளை
முற்றும் வெளியேற்றிய
இயந்திரம்!
தாள்கள்!
தமிழ் மண்ணை
உழுத ஏர்கள்!
கலைஞர்
எங்கள் நெஞ்சங்களில்
எப்போதும் வாழ்வார்!
தமிழுக்குத் தொல்லையெனில்
உயிர்கொண்டு எழுவார்!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.08.2018
Aucun commentaire:
Enregistrer un commentaire