jeudi 16 août 2018

வெண்பா மேடை - 105

வெண்பா மேடை - 105
  
அடி மறி நேரிசைப் பஃறொடை வெண்பா!
[இவ்வகை வெண்பா என்னுடைய உருவாக்கம்]
  
கற்றோங்கச் செய்திடு வாய்..காத்து! நற்றமிழே!
பற்றோங்கச் செய்திடு வாய்..பார்த்து! - பொற்புடனே
முற்றோங்கச் செய்திடு வாய்..மூத்து! நற்றவமே
பெற்றோங்கச் செய்திடு வாய்..பேறு! - வெற்பெனவே
கற்போங்கச் செய்திடு வாய்..காப்பு! சொற்றமிழே
வற்போங்கச் செய்திடு வாய்..வார்த்து - கொற்றழகே
உற்றோங்கச் செய்திடுவாய் ஓர்ந்து!
  
முன்னடிகள் இடம் மாறி வந்தன
  
வற்போங்கச் செய்திடு வாய்..வார்த்து கொற்றழகே
பற்றோங்கச் செய்திடு வாய்..பார்த்து! - பொற்புடனே
முற்றோங்கச் செய்திடு வாய்..மூத்து! நற்றவமே
பெற்றோங்கச் செய்திடு வாய்..பேறு! - வெற்பெனவே
கற்றோங்கச் செய்திடு வாய்..காத்து! நற்றமிழே!
கற்போங்கச் செய்திடு வாய்..காப்பு! சொற்றமிழே
உற்றோங்கச் செய்திடுவாய் ஓர்ந்து!
  
ஈற்றடி முதலடியாய்!
  
உற்றோங்கச் செய்திடு வாய்..ஓர்ந்து! நற்றமிழே!
பற்றோங்கச் செய்திடு வாய்..பார்த்து! - பொற்புடனே
முற்றோங்கச் செய்திடு வாய்..மூத்து! நற்றவமே
பெற்றோங்கச் செய்திடு வாய்..பேறு! - வெற்பெனவே
கற்போங்கச் செய்திடு வாய்..காப்பு! சொற்றமிழே
வற்போங்கச் செய்திடு வாய்..வார்த்து - கொற்றழகே
கற்றோங்கச் செய்திடு வாய்..காத்து!
  
ஈற்றடி இரண்டாம் அடியாய்!
  
கற்றோங்கச் செய்திடு வாய்..காத்து! நற்றமிழே!
உற்றோங்கச் செய்திடு வாய்..ஓர்ந்து! - பொற்புடனே
முற்றோங்கச் செய்திடு வாய்..மூத்து! நற்றவமே
பெற்றோங்கச் செய்திடு வாய்..பேறு! - வெற்பெனவே
கற்போங்கச் செய்திடு வாய்..காப்பு! சொற்றமிழே
வற்போங்கச் செய்திடு வாய்..வார்த்து - கொற்றழகே
பற்றோங்கச் செய்திடு வாய்..பார்த்து!
  
இவ்வாறு ஈற்றடி எவ்விடத்திலும் மாறி அமைந்தும் பொருளும் யாப்பும் குன்றாமல் அமையும்.
  
இவ்வாறு அமைந்த 'அடி மறி நேரிசைப் பஃறொடை வெண்பா' ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து அடி மறி நேரிசைப் பஃறொடை வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
17.08.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire