வெண்பா மேடை - 92
உவமைப்பொருள் பின்வரும்நிலை யணி வெண்பா!
வேல்விழியும், எஃகுடைய வெல்மொழியும், கூர்தாக்கும்
நுால்வடிவும், வன்படை நுண்மூக்கும், - கால்வல்ல
எண்ண எழிலும் எழும்சத்தி பொற்கற்பும்
வண்ணம் அளிக்கும் வளர்ந்து!
[எஃகு, கூர், படை, கால், சத்தி ஆகியன வேல் என்ற பொருளைக் குறிக்கும் சொற்கள்]
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
உவமை அணியுடன் பொருள் பின்வரும்நிலை அணி கூடிவரின், அது உவமைப் பொருள் பின்வருநிலையாம்.
பல பெயர் கொண்ட ஒரு பொருள் உவமையாக, ஒரு பாடலில் பலமுறை வரவேண்டும். மேற்கண்ட வெண்பாவில் விழி, மொழி, தாக்கும் இடைவினை, மூக்கு, எண்ணம், கற்பு ஆகியவற்றிற்கு 'வேல்' உவமையாக வந்தது. வேல் என்ற பொருளைக் குறிக்கம் சொற்கள் மீண்டும் மீண்டும் உவமையாக வந்துள்ளமையால் உவமைப்பொருள் பின்வருநிலை அணி ஆயிற்று.
விரும்பிய பொருளில் உவமைப்பொருள் பின்வரும்நிலை யணி வெண்பா ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து 'உவமைப்பொருள் பின்வரும்நிலை யணி' வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
02.08.2018
அருமையான பதிவு. தொடருங்கள். தொடர்கிறோம். உங்கள் வலைப்பதிவில் திகதி, கருத்துரைப்பெட்டி உட்பட பிரான்ஸ் மொழியில் இருக்கிறது. அதனை தமிழுக்கோ அல்லது ஆங்கிலத்திற்கோ மாற்றுங்கள். நீண்ட காலமாக எழுதி வருகிறீர்கள். ஆட்சென்ஸ் விளம்பர சேவையை வலைப்பதிவில் இணையுங்கள்.
RépondreSupprimerநமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்
https://newsigaram.blogspot.com/