mardi 28 août 2018

வெண்மேடை - 116

வெண்பா மேடை - 116
    
நான்மணி வெண்பா!
    
கொல்லாமை சாற்றிடுவாய்! கோல நெறிமாறிச்
செல்லாமை போற்றிடுவாய்! செந்தமிழே! - அல்லலுறும்
கல்லாமை நீக்கிடுவாய்! கையூட்டும் ஆட்சியினை
இல்லாமை ஆக்கிடுவாய் இங்கு!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஒரே பாடலில் நான்கு மணியான கருத்துகளை் அமைந்திருக்கும் இந்த வெண்பாவைப்போல் விரும்பிய பொருளில் வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவை தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
26.08.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire