வெண்பா மேடை - 102
அடி மறி நேரிசை வெண்பா!
1.
அணிகமழும் அங்கம் அழகு! வணங்கும்
பணிகமழும் பாவை படைப்பு! - கணிந்தே
குணங்கமழும் இன்பம் கொழித்து! பிணைந்தே
மணங்கமழும் பாக்கள் மலர்ந்து!
ஈற்றடி முதலடியாய்,
மணங்கமழும் பாக்கள் மலர்ந்து! வணங்கும்
பணிகமழும் பாவை படைப்பு! - கணிந்தே
குணங்கமழும் இன்பம் கொழித்து! பிணைந்தே
அணிகமழும் அங்கம் அழகு!
ஈற்றடி இரண்டாம் அடியாய்!
அணிகமழும் அங்கம் அழகு! வணங்கும்
மணங்கமழும் பாக்கள் மலர்ந்து! - கணிந்தே
குணங்கமழும் இன்பம் கொழித்து! பிணைந்தே
பணிகமழும் பாவை படைப்பு!
ஈற்றடி மூன்றாம் அடியாய்!
அணிகமழும் அங்கம் அழகு! வணங்கும்
பணிகமழும் பாவை படைப்பு! - கணிந்தே
மணங்கமழும் பாக்கள் மலர்ந்து! பிணைந்தே
குணங்கமழும் இன்பம் கொழித்து!
2.
முத்தங்கள் அத்தனை யும்முத்து! வித்தைவிழி
சித்தம்..கள் சேர்த்திடு மே,சீர்த்து! - சித்திரமே!
சத்தங்கள் ஏன்மனத் துள்,சாற்று! தத்தைமொழி
நித்தம்..கள் தந்திடுமே நீண்டு!
ஈற்றடி முதலடியாய்,
நித்தம்..கள் தந்திடு மேநீண்டு!வித்தைவிழி
சித்தம்..கள் சேர்த்திடு மே,சீர்த்து! - சித்திரமே!
சத்தங்கள் ஏன்மனத் துள்,சாற்று! தத்தைமொழி
முத்தங்கள் அத்தனை யும்முத்து!
ஈற்றடி இரண்டாம் அடியாய்!
முத்தங்கள் அத்தனை யும்முத்து! வித்தைவிழி
நித்தம்..கள் தந்திடு மே,நீண்டு! - சித்திரமே!
சத்தங்கள் ஏன்மனத் துள்,சாற்று! தத்தைமொழி
சித்தம்..கள் சேர்த்திடுமே சீர்த்து!
ஈற்றடி மூன்றாம் அடியாய்!
முத்தங்கள் அத்தனை யும்முத்து! வித்தைவிழி
சித்தம்..கள் சேர்த்திடு மே,சீர்த்து! - சித்திரமே!
நித்தம்..கள் தந்திடுமே நீண்டு! தத்தைமொழி
சத்தங்கள் ஏன்மனத் துள்,சாற்று!
அடி மறி மண்டில ஆசிரியப்பா போன்றே, இவ்வெண்பாவும் அடிகளை இடம் மாற்றிப் பாடினாலும், பொருள் குன்றாமல், வெண்பாவின் இலக்கணம் குலையாமல் அமைதல் வேண்டும்.
விரும்பிய பொருளில் 'அடிமறி நேரிசை வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து அடிமறி நேரிசை வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
14.08.2018
Aucun commentaire:
Enregistrer un commentaire