வெண்பா மேடை - 99
ஒற்றெழுத்து வெண்பா!
அவளின் கண்
வண்ணக்..கண் கொண்டென்றன் வன்னெஞ்சைத் தான்கொன்றாள்!
உண்ணுங்..கண்! ஒட்டுங்..கண்! ஓங்குங்..கண்! - தண்மைக்..கண்!
பண்ணின்கண் நிற்குங்..கண்! எண்ணத்தைப் பற்றுங்..கண்!
கண்டின்..கண் செண்டின்..கண் காண்!
கொஞ்சும்சீர் விஞ்சுங்..கண்! கொட்டுந்தேள் காட்டுங்..கண்!
மஞ்சம்சீர் மீட்டுங்..கண்! வாட்டுங்..கண்!
- நஞ்சைத்தான்
நல்குங்..கண்! வேல்,சேல்,வில் நாட்டுங்..கண்! இன்பத்தேன்
பல்குங்..கண்! வெல்லுங்..கண் பார்!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
இவ்வெண்பாவில் 2, 4,
6,...... இரட்டைப்படை எழுத்துகள் யாவும் ஒற்றெழுத்தாய் அமையும். விரும்பிய பொருளில்
'ஒற்றெழுத்து வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன்
வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து ஒற்றெழுத்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
10.08.2018
Aucun commentaire:
Enregistrer un commentaire