வெண்பா மேடை - 100
தமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா!
தாழை மணத்தமிழே! வாழை வளத்தமிழே!
பேழை மணித்தமிழே! பேரழகே! - யாழின்ப
ஆழ்வே! அருண்மொழியே! அன்பெழிலே! ஆர்த்தபுகழ்
வாழ்வே! தொழுமெனை வாழ்த்து!
தமிழின் சிறப்பெழுத்தாகிய 'ழகரத்தை' வெண்பாவின் பதினைந்து சீர்களும் பெற்று வரவேண்டும். விருப்பிய பொருளில் 'தமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
11.08.2018
Aucun commentaire:
Enregistrer un commentaire