mardi 21 août 2018

வெண்பா மேடை - 110


வெண்பா மேடை - 110
  
ஐந்து மண்டில வெண்பா
இவ்வகை வெண்பா என்னுடை உருவாக்கம்
  
1.
துாயவனே! சுந்தரனே! தொன்மையனே! தாயவனே!
மாயவனே! வந்தியனே! வன்மையனே! - நேயவனே!
வாமனனே! நீண்டவனே! மாமணியே! சூழ்நலமே!
வாமனமே வாழ்புகழே வார்த்து!
  
2.
சுந்தரனே! தொன்மையனே! தாயவனே! துாயவனே!
வந்தியனே! மாயவனே! நேயவனே! - வன்மையனே!
வாமனனே! நீண்டவனே! மாமணியே! வாழ்புகழே!
வாமனமே சூழ்நலமே வார்த்து!
  
3.
தொன்மையனே! மாமணியே! சுந்தரனே! தாயவனே!
வன்மையனே! நேயவனே! மாயவனே! - வந்தியனே!
சூழ்நலமே! வாமனனே! துாயவனே நீண்டவனே!
வாழ்புகழே வாமனமே வார்த்து!
  
4.
தாயவனே! துாயவனே! சுந்தரனே! தொன்மையனே!
நேயவனே! வந்தியனே! நீண்டவனே! - மாயவனே!
வாமனனே! வன்மையனே! வாமனமே சூழ்நலமே!
மாமணியே! வாழ்புகழ் வார்த்து!
  
5.
மாமணியே! தாயவனே! வந்தியனே! நேயவனே!
வாமனனே! நீண்டவனே! வன்மையனே! - வாமனமே
துாயவனே! தொன்மையனே! சுந்தரனே! சூழ்நலமே!
மாயவனே! வாழ்புகழே வார்த்து!
  
ஐந்து மண்டில வெண்பா என்பது ஒரு வெண்பாவில் வந்த சீர்கள் இடம்பெயர்ந்து ஐந்து வெண்பாவாக அமைதல். ஓரடியில் அமைந்த சொல்லமைப்பு ஒரு முறை மட்டுமே வரவேண்டும். ஐந்து வெண்பாவிலும் சீர்கள் மாறுபட்டு இருக்க வேண்டும். ஒப்புமையாக ஓரடியும் அமையாது. [துாயவனே! சுந்தரனே! தொன்மையனே! தாயவனே!] இது முதல் வெண்பாவின் முதல் அடி. இதே சீரமைப்பில் இவ்வடி வேறு எங்கும் வரவல்லை.
  
ஐந்து வெண்பாக்களிலும் எதுகை, மோனை, அமைதல் வேண்டும். மோனை அமையா அடிகளில் எதுகை அமைந்து மோனையின் இடத்தைச் சரி செய்யும்.
  
விரும்பிய பொருளில் 'ஐந்து மண்டில வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து ஐந்து மண்டில வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
இவ்வெண்பா ஐந்துக்கு மேற்பட்ட மண்டிலமாக அமையவும் வாய்ப்புண்டு.
  
6.
மாயவனே! வாமனனே! வந்தியனே! மாமணியே!
துாயவனே சூழ்நலமே! தாயவனே! - நேயவனே!
தொன்மையனே! நீண்டவனே! சுந்தரனே! வாமனமே!
வன்மையனே! வாழ்புகழே வார்த்து!
  
அன்புடன்

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
22.08.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire