என்ன கொடுமை?
உள்ளே ஒன்றும் வெளியொன்றும்
உரைக்கும் மாந்தர் சேர்ந்தினிதே
வள்ளல் பெருமான் திருப்புகழை
வடிவாய்ப் பேசி மகிழ்ந்தனரே!
கொல்லா நெறியின் மாண்புகளைக்
கொடுக்க வந்த பேச்சாளர்
எல்லாக் கறியும் உண்பாராம்
என்ன கொடுமை இறையவனே?
உண்பதற்கும் பண்பதனை பேசுவதற்கும் ?
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
கவியாழி தந்த கருத்தைப் படித்தால்
புவியாழி பொங்கும் புரண்டு!
கொல்லா நெறியின் மாண்புகளைக்
RépondreSupprimerகொடுக்க வந்த பேச்சாளர்
எல்லாக் கறியும் உண்பாராம்
என்ன கொடுமை இறையவனே?//
அருமையாகச் சொன்னீர்கள்
இன்று பேச்சு ஒன்றும் செயல் ஒன்றுமாய் இருப்பதே
வெற்றிக்கான இலக்கணமாக மாறிப் போனது
மனம் கவர்ந்த அருமையான கவிதைக்கு
மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
Supprimerவணக்கம்!
பேச்சொன்று! பின்னே செயலென்று! பொய்வாழ்வு
மூச்சின்றிப் போகும் முடிந்து!
tha.ma 2
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
தமிழ்மனத் தோழா! தமிழ்மணம் தந்தாய்!
அமிழ்தினில் ஆழும் அகம்!
உண்மை தான் ஐயா அஹிம்சையை பற்றி பேச வருபவர்கட்கு விருந்தாக கோழி பிராயாணி கொடுக்கும் சமூகம் இது தெளிவாக சொன்னீர்கள்.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
தோழி கருத்திட்ட கோழிப் புரியாணி!
வாழியென வாழ்த்துமென் வாய்!
த. ம .3
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
மூன்றரும் வாக்குகள்! முத்தமிழ் போல்சுவை
ஈன்றுறும் என்னுள் இருந்து
RépondreSupprimerதமிழ் உறவுகளுக்கு வணக்கம்!
மூவா் படைத்த மொழிபடித்து இன்புற்றேன்
தேவா் உலகில் திளைத்து!