mardi 15 janvier 2013

சின்னச் சிட்டே




சின்னச்சிட்டே


சின்னச் சிட்டே வாடி - நல்
சிறக்கும் வாழ்வைத் தாடி!
வண்ணத் தமிழில் பாடி - நீ
வாராய் என்னைத் தேடி!

மயக்கும் மலர்கள் சூடி - இங்கு
மகிழ்ந்து வருக ஆடி!
இயலும் இசையுங் கூடி - நல்
இன்பம் தருக கோடி!

உலவும் மதியே ஓடி - வா
உயர்ந்த வாழ்வை நாடி!
வளரும் பகையைச் சாடி - நாம்
மணப்போம் மாலை சூடி!

15 commentaires:

  1. வணக்கம் ஐயா '
    இன்று உலகில் அழிந்துகொண்டிருக்கும்
    பறவை இனம் என்று சொல்லும்
    சிங்கார சிட்டுக் குருவிக்கு
    அழகிய பாடல் படைத்தீர்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சிட்டுக் குருவியின் சீரறிந்து நன்றே..கை
      கொட்டிக் களிப்பாய்க் குதித்து!

      Supprimer
  2. சிட்டுக் குருவிக்கு சிறப்பான கவிதை

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சிட்டுக் குருவியாய்க் கொட்டிய சொல்யாவும்
      கட்டுக் கரும்பெனக் காண்!

      Supprimer
  3. நல்ல ரசனை ! சிறப்பு !

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நல்ல கவிதையை நாளும் சுவைக்கின்ற
      வல்ல கவிமனமே வா!

      Supprimer
  4. சின்னச் சிட்டுக்குச் சிங்காரமாய்ச் செய்தி சொல்லிவிட்டுள்ளீர்கள் ஐயா. அருமை.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சிட்டுக் குருவியைத் தொட்டுக் களித்திட்டீா்!
      பட்டுக் கருத்தைப் பதித்து!

      Supprimer
  5. வணக்கம்
    கவிஞர் ஐயா

    சிறு வரிக் கவிதை என்றாலும் கருத்து மிக ஆழம் அருமையான படைப்பு மிக்க நன்றி ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வருகைக்கு நன்றி! வளமார் கருத்தின்
      பெருமைக்கு நன்றி பெருக்கு!

      Supprimer
  6. வண்ணக் கவியை நாடி –நான்
    வந்து பார்த்தேன் ஓடி!
    எண்ணம் எழுந்தே ஆடி – நல்
    இனிமை கொண்டேன் கோடி!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!

      திருநாள் இனிமை பெருக! - உன்
      தேனார் தமிழில் உருக!
      அருணா கவியே வருக! - நல்
      அழகாய்க் கருத்தைத் தருக!

      Supprimer

  7. தமிழ் உறவுகளுக்கு வணக்கம்

    நாளும் வருகைதரும் நண்பா்களே! உள்ளத்துள்
    மூளும் கருத்தை மொழிகின்றீா் - தோளும்
    உயா்த்தி வணங்குகிறேன்! ஒண்டமிழ் பாடும்
    முயற்சி தொடா்வேன் முனைந்து!

    RépondreSupprimer
  8. செல்போன் டவரால் ஓடும் சிட்டை அழகாக அழைத்த வரிகள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      சிட்டுக் குருவிபோல் நானும் சிறகுகளைக்
      கட்டிக் களிக்கும் கவி!

      Supprimer