பூமகள்
பூமகள் பெயராள் வரும்போது - இங்குப்
பூக்கும் மலரில் மணமேது?
தைமகள் புவியில் வரும்போது - நம்
தமிழர்க் கினிமை வேறேது?
இன்னிசை மீட்டும் இளமாது - அவள்
எழுதும் கவிதைக் கீடேது?
கண்விசை தந்தாள் சுகதூது - அவள்
காதல் பார்வைக்கு இணையேது?
மலர்முகம் கண்டால் மிகசாது - அது
வாட்டும் துயருக்(கு) அளவேது?
நிலவது தேயும் வான்மீது - அவள்
நினைவே என்றும் தேயாது!
தைமகள் புவியில் வரும்போது - நம்
RépondreSupprimerதமிழர்க் கினிமை வேறேது?//
தமிழ் தை மாதத்தை வரவேற்போம்
Supprimerவணக்கம்!
தைமகள்! இன்பத் தமிழ்மகள்! கூா்விழி
மைமகள் நல்கும் வளம்!
நிலவு தேய்ந்தாலும் நினைவுகள் தேய்ந்திடாது! பூமகளைப் பாடிய பா அருமை ஐயா. மிக ரசித்தேன்.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
பூமகளைப் பாடிய பா!பூந் தமிழ்தந்த
பாமகளைப் பாடிய பா!
முழுநிலவாய்
RépondreSupprimerஅகத்தினில் அரங்கேறிய
பூமகளுக்கு
அழகிய கவிதை....
Supprimerவணக்கம்!
நண்பா் மகேந்திரன் நல்கும் கருத்துக்கள்
தண்பா இனிமை தரும்!
அருமை ஐயா , எல்லாவிதத்திலும் கலக்குறிங்க...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
கலக்கும் கவிதைகள்! காலம் களித்து
நிலைக்கும் என்றும் நிலத்து!
RépondreSupprimerபூமகள் பாடல்! பாமகள் பாடல்
Supprimerவணக்கம்!
இளங்கவி செல்வா இயம்பிய சொற்கள்
வளங்கவி பெற்ற வரம்!
RépondreSupprimerபூமகள் பாடல்
பொழியும் இனிமை!
பாமகள் ஆடல்
படைக்கும் புதுமை!
Supprimerவணக்கம்!
பாமகள் நல்லருளால் பாவலன் என்னாவில்
பூமகள் பூத்தால் பொலிந்து!
படமும் பாவும் அருமை !
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
பாட்டும் படமும் படைத்தசுவை நெஞ்சத்துள்
கூட்டும் தமிழைக் குவித்து!