dimanche 16 septembre 2012

என்ன பார்வை?





என்ன பார்வை?




என்ன பார்வை? அப்பப்பா!
     எலும்பும் நெகிழ்ந்தே உருகுதடி!
சொன்ன சொற்கள் செவியறையில்
     சுழன்று சுழன்று கமழுதடி!
அன்னப் பறவை  ஏக்கமுறும்
     அழகே உன்றன் நடையினிலே!
சின்ன பெண்ணே! சித்திரமே!
     செந்தா மரையே! செந்தமிழே!

8 commentaires:

  1. கவிதை கவிதை கவிதை இதே
    காதல் பொங்கும் கவிதை இதே
    செவியில் தேனாய் புகுந்தெம்மை
    சிலிர்க்க வைக்கும் கவிதை இதே.
    புவியில் உம்போல் கவிஎழுதும்
    புலமை கொண்டோர் வெகு சிலரே
    தவிக்கும் தமிழ்த்தாய் மனம் குளிர
    தருக தருக கவி பலவே.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கவிதை அழகொடு காதல் புாிந்தீா்!
      குவித்தேன் இருகை குளிர்ந்து!

      Supprimer
  2. கவிதை என்ன அழகு அதற்கேற்ப புகைப்படமும் அருமை ஐயா

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாட்டும் படமும் படிப்பவா் உள்ளத்துள்
      கூட்டும் சுவையைக் குவித்து!

      Supprimer
  3. Réponses

    1. வணக்கம்!

      சின்னவள் பார்த்தால் செழுந்தமிழ் பூத்தாடும்!
      என்னவள் என்றும் எழில்!

      Supprimer

  4. வண்ண விழிகள் வடித்த விருத்தத்தை
    உண்ணத் துடிக்கும்என் உள்ளமே! - எண்ணத்துள்
    இன்றேன் சுநக்கும்! இதயம் சிறகேந்தும்!
    நின்றேன்! மறந்தேன்! நிலம்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சின்ன விழிகளில் சிக்கித் தவிக்கின்றேன்!
      என்னை விடுவிக்க யாருள்ளார்? - இன்றேன்
      குளத்தில் முழுகுகிறேன்! கோலத் தமிழின்
      நலத்தில் முழுகுகிறேன் நான்!

      Supprimer