உளமார
- உளமாற
உளமார
என்னும் சொல்லுக்கு
மனம்நிறைய என்பது
பொருள். உளமாற
என்னும் சொல்லுக்கு
மனம் மாறுதலடைய
என்பது பொருள்.
(உளமார நன்றியைத்
தெரிவிக்கிறேன். உளம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்)
(உளமாற நன்றியைத்
தெரிவிக்கிறேன் உளம் மாற நன்றியைத் தெரிவிக்கிறேன்)
உளமார மனமார
என்றால் உளம்
நிறைய மனம்
நிறைய என்றும்
உளமாற மனமாற
என்றால் உள்ளம்
மாறுபட மனம்
மாறுபட என்றும்
பொருள்படும்.
பண்டக
சாலை - பண்ட
சாலை
பண்டக
சாலை என்பது
தவறு, பண்ட
சாலை என்று
எழுதுவது சரியானது.
பண்டம் விற்கும்
அல்லது வைத்திருக்கும்
சாலை என்பது
பொருள்.
பிழை } திருத்தம்
சமச்சீா் கல்வி } சமச்சீா்ச்கல்வி
புதுவை
கழகம் } புதுவைக் கழகம்
கடை
பிடிப்பு } கடைப்பிடிப்பு
முதலியார்ப்பேட்டை } முதலியார் பேட்டை
மாநில பொதுக்குழு } மாநிலப் பொதுக்குழு
பொதுக்குழு கூட்டம் } பொதுக்குழுக் கூட்டம்
கூட்டுறவு சங்கம் } கூட்டுறவுச் சங்கம்
வாழ்த்தி பேசினார் } வாழ்த்திப் பேசினார்
வரலாற்று சுவடுகள் } வரலாற்றுச் சுவடுகள்
சங்க தலைவா் }
சங்கத் தலைவா்
அனைத்தும் அறிய வேண்டியவை... நன்றி ஐயா...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
அாிய தமிழ்மொழியை ஆழ்ந்து தெளிவீா்!
உாிய முறையில் உணா்ந்து!
நல்ல தமிழ் 9ம் படித்தேன். மிக்க நன்றி ஆசிரியரே.
RépondreSupprimerவேதா. இலங்காதிலகம்.
Supprimerவணக்கம்!
நல்ல தமிழெனும் வல்ல பதிவினை
வெல்லமாய் உண்டீா் விரைந்து!
அயல்மொழி தன்னை அழகாய் எழுதப்
RépondreSupprimerபுயலென நம்மவர் போவார்! - வயலென
ஓங்கிச் செழிக்கின்ற ஒண்டமிழைக் காக்காமல்
தேங்கிக் கிடக்கின்றாா்! தீது!
Supprimerவணக்கம்!
தீதெனச் சொன்னாலும் சூதெனச் சொன்னாலும்
ஏதென எண்ணாமல் இங்கிருப்பார்! - கோதென
வாழும் மனத்தினரை வாட்டும் துயரங்கள்
சூழும் மலைபோல் தொடா்ந்து!