விருத்த மேடை - 28
அறுசீர் விருத்தம் - 28
[தேமா + கருவிளங்காய் + கூவிளம் + புளிமா + கருவிளங்காய் + கூவிளம்]
[அரையடி வெண்டளை]
தோல்வியிற் கலங்கேல் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
வெல்லும் வழியுணர்க! என்றுமே
விரைந்து செயற்படுக! நற்குறள்
சொல்லும் வழியுணர்க! என்றுமே
துணிந்து நடந்திடுக! சீருடன்
செல்லும் வழியுணர்க! என்றுமே
சிறந்து திகழ்ந்திடுக! தோல்வியைக்
கொல்லும் வழியுணர்க! என்றுமே
கொடியோர் பகையறுக நெஞ்சமே!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
தேமா + கருவிளங்காய் + கூவிளம் + புளிமா + கருவிளங்காய் + கூவிளம் என்ற வாய்பாட்டில் ஓரடி அமைய வேண்டும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
22.02.2018

Aucun commentaire:
Enregistrer un commentaire