விருத்த மேடை - 27
அறுசீர் விருத்தம் - 27
[விளம் + மா + விளம் + மா + விளம் + காய்]
தொன்மைக்கு அஞ்சேல் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
தொன்மையாம் என்றே தோய்வுறும் போக்கைத்
துணிவுடன் போக்கிடுவாய்!
நன்மையாம் என்றே நனிதுயர் பொய்யாம்
நடைமுறை நீக்கிடுவாய்!
புன்மையாம் என்றே புகன்றிடும் செயலைப்
புதையுற ஆக்கிடுவாய்!
வன்மையாம் என்றே வாழ்வுறும் புதுமை
மாண்புறக் கூத்திடுவாய்!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
விளம் + மா + விளம் + மா + விளம் + காய் என்ற வாய்பாட்டில் ஓரடி அமைய வேண்டும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமையும்.
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
21.02.2018

Aucun commentaire:
Enregistrer un commentaire