vendredi 29 novembre 2013

கொஞ்சுந் தமிழ்

கொஞ்சுந் தமிழ்

மயக்கும் இன்ப மதுவே வாராய்!
மணக்கும் வண்ண மலரே வாராய்!
வியக்கும் இனிய தமிழே வாராய்!
வெற்றி நிலைக்க விரைந்தே வாராய்!

படிக்கப் படிக்கப் படரும் தமிழே!
பாடப் பாடச் சுடரும் தமிழே!
குடிக்கக் குடிக்கச் சுரக்கும் தமிழே!
குன்றாச் சுவையைக் கொடுக்கும் தமிழே!

என்னை யாளும் வண்ணத் தமிழே
என்றன் நாவில் இருக்க வாராய்!
உன்னைப் போற்றி உள்ளம் மகிழ
உன்றன் அருளை உவந்து தாராய்!

10.06.1980 

10 commentaires:

  1. வணக்கம் ஐயா!

    இன்பத் தமிழை எழிலாய்க் கூவி
    எங்கள் உள்ளம் இனிக்கச் செய்தாய்!
    கொஞ்சும் தமிழும் கோலக் கவியும்
    நெஞ்சம் நிறைக்க நிகழும் விருந்து!

    அற்புதம்! அருமையான தேன்தமிழ்க் கவிச் சுவை!

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  2. வம்
    ஐயா

    அழகு தமிழில் அழகான கவிமாலை. அருமை வாழ்த்துக்கள் ஐயா
    (முதலாவது போட்ட பின்னூட்டத்தை இல்லாமல் செய்யுங்கள்.)

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  3. வண்ணத் தமிழ் உங்கள் எண்ணம் எல்லாம் நிலைத்திட வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
  4. வாராய் வாராய் என்று போவோர் வருவோரையெல்லாம்
    உங்கள் கவிதை அழகால் வரிந்து கூப்பிட்டுவிடுகிறீர்களே...

    அருமையோ அருமை கவிஞரே!

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  5. இனிக்கிறது ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  6. ஆகா எத்தனை வித அழகு தமிழ்
    நாவுக்கரசி நாவில் நின்று நர்த்தனம் ஆடுகிறாள்
    தூய தமிழ் பாடுகிறாள். அருமை....!
    நன்றி வாழ்த்துக்கள் ......!

    RépondreSupprimer
  7. சுவைத்தேன் உங்கள் தமிழ்.....

    த.ம. 11

    RépondreSupprimer
  8. கவிதை அருமை.
    வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer