தேன் கிண்ணம்
தூங்காத நெஞ்சம் உண்டு - காதல்
துயர்களை வாழ்வில் கொண்டு!
தாங்காத போதை மொண்டு - மனம்
தவிக்குதே இவளைக் கண்டு!
உன்னிறம் மலரின் வண்ணம் - நடை
உன்னிடம் பயிலும் அன்னம்!
பொன்னிறம் மின்னும் கன்னம் -அது
போதையைத் தரும்தேன் கிண்ணம!;
நினைவுகள் நாளும் பெருகும் - என்
நெஞ்சமும் உன்னால் உருகும்!
கனவுகள் உயிரைப் பருகும் - இன்பக்
களிப்பினில் உள்ளம் சொருகும்!
வணக்கம்
RépondreSupprimerஐயா
தூங்காத நெஞ்சம் உண்டு - காதல்
துயர்களை வாழ்வில் கொண்டு!
தாங்காத போதை மொண்டு - மனம்
தவிக்குதே இவளைக் கண்டு!
தேன்கிண்ணத்தில் காதல்ச்சுவை ஊறுகிறது..ஐயா.. அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தேன் கிண்ணத்தில் வீழ்ந்த
RépondreSupprimerவண்டாகிச் சொக்கிப் போனேன்
மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்
tha.ma 1
RépondreSupprimerகளிப்பினில்
RépondreSupprimerஉள்ளம்
உருகுதய்யா
ஆகா...! ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...
RépondreSupprimerதேன் கிண்ணம் போலே - இனிய
RépondreSupprimerதித்திக்கும் கவிதை கண்டு
மான்விழி யுடையாள் மருள்வாள் - இளமை
மயக்கம் நெஞ்சில் தருவாள்
அருமை அருமை
வாழ்த்துக்கள் கவிஞரே
வாழ்கவளமுடன்
அட.. டா.. அருமை!
RépondreSupprimerஎங்கே கவிஞரின் காதல் கவிதைகளைக் காணோமே
என்று நினைத்திருந்தேன்..
நான் நினைக்க நீங்களும் இங்கே பாடிவிட்டீர்களே.:)
அழகும் அசத்தலும் உங்கள் கவிதை கவிஞரே!
வாழ்த்துக்கள்!
இப்படியெல்லாம் எழுத நமக்கு அனுமதி கொடுக்கமாட்டார்கள் நண்பரே!
RépondreSupprimerகாதல் தரும் இன்பம்
RépondreSupprimerசாதல் இன்றியே நீளும்...
அருமைக் கவிதை! நன்றி ஐயா!
"பொன்னிறம் மின்னும் கன்னம் -அது
RépondreSupprimerபோதையைத் தரும்தேன் கிண்ணம!" என
அழகான கற்பனை வீச்சில்
படிக்கப் படிக்கப் பா சுவைக்கிறதே!
அழகிய சந்தக் கவிதையாயுள்ளது ஐயா.
RépondreSupprimerஆழ்ந்து ரசிக்கவைத்த சீர்களின் அமைப்பு.
நல்ல இசைப் பாடல். அருமை!
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!
வணக்கம் ஐயா...
RépondreSupprimerமனதை ஈர்க்கிறது உங்கள் கவிதை!
சந்தங்கள் அற்புதமாக இருக்கின்றன.
அருமை! தொடர்ந்து இதுபோல் வேறு வேறு கவிதைகள் தாருங்கள்.
அவைதான் எனக்குக் கற்றுக்கொள்ள மிக உதவியாக இருக்கின்றன.
நானும் முயன்றேன்...
தருகிறீர் தினமொரு பாடல்! - நம்
தமிழிவள் காண்பது ஆடல்!
உருகிடும் சீர்களின் கூடல்! - அதை
உணர்ந்திடத் தூண்டுதே தேடல்!
என் பணிவான வணக்கமும் வாழ்த்துகளும் ஐயா!
* வெளிவிடத் தக்கதாக இல்லையாயின் தவிர்திடுங்கள்.
மிக்க நன்றி ஐயா!
உங்கள் தரவை வைத்து தருகிறேன் ஒரு பாடல்.
தூங்காத கண் ஒன்று உண்டு.
RépondreSupprimerதுடிக்கின்ற சுகம் ஒன்று உண்டு
உங்க கவிதையை இந்த மேட்டில் கூட பாடலாம்!
தமிழ்மணம் பிளஸ் +1
RépondreSupprimerமான்,மயில் கன்னல் மதுவகை அத்தனையும்
தேன்கிண்ணப் பாட்டின்முன் திண்டாடும்! - நான்என்ன
சொல்ல? சுடா்க்கவியே! துாயவுன் பாக்களை
மெல்லப் படிப்பேன் மிதந்து!
மனதை அப்படியே சொக்க வைக்கும் வரிகள், எனது வணக்கங்களும் பாராட்டுக்களும்.
RépondreSupprimer