நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்
வணக்கம்!
கலைகளைப் போற்றிக் கமழ்மன அம்பாள்
சுளையெனத் தந்தார் சுவை!
கலைகளைப் போற்றிக் கமழ்மன அம்பாள்
சுளையெனத் தந்தார் சுவை!
12.12.2012
--------------------------------------------------------------------------------------------------------
வணக்கம்
அறிவியலை
ஆய்ந்தே அருந்தமிழில் தந்தால்
சிறப்பியலைக்
காண்போம் செழித்து!
12.12.2012
--------------------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
உன்னை நோக்கிக் கவிதையிலே
உயா்ந்த தமிழின் எழில்மணக்கும்!
பொன்னை நோக்கிப், பூத்தாடும்
பூவை நோக்கிச் சொல்நடக்கும்!
என்னை நோக்கி இருவிழிகள்
ஏங்கி அழைத்த நினைவுவரும்!
முன்னை நோக்கிச் செல்வேனோ?
மூளை முழுதும் உன்கவியே!

வருகைக்கும்
வண்ணக் கருத்திற்கும் நன்றி!
பெருமைக்கும்
போற்(று) அருமைக்கும் - பொருத்தமுறும்
தங்கம்
பழனி தமிழ்வலை! கட்டுடைய
அங்கம்
அமைந்த அழகு!
13.12.2012
--------------------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
நல்லாட்சி
வேண்டுமென நல்கும்..பா! போற்றுகிற
வல்லாட்சி
வேண்டுமென வார்த்த..பா! - வெல்லமெனச்
சொல்லாட்சி
கண்டேன்! சுடா்தமிழ்ச் சீனியிடம்
பல்லாட்சி
கண்டேன் படா்ந்து!
13.12.2012
--------------------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
மலா்ந்த
தமிழின் மாண்புகளை
மகிழ்ந்தே அம்பாள் தந்துள்ளார்!
வளா்ந்த
உலகம் அறிந்திடவும்
வடிவாய்ப் பாடல் இசைத்துள்ளார்!
உலா்ந்த
பாதை செழிப்புறவும்
உலகோர் உண்டு சிறப்புறவும்
குளிர்ந்த
தமிழின் நன்னெறியைக்
கூவி முரசே கொட்டிடுக!
13.12.2012
--------------------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
கருத்துக்
கவிதை! கவிஞன்என் உள்ளே
விருந்தின்
சுவையை விளைத்து
13.12.2012
--------------------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
பெண்ணினை
வெறுப்பார் உள்ளார்!
பெருமையை வெறுப்பார் உள்ளார்!
மண்ணினை
வெறுப்பார் உள்ளார்!
மாண்பினை வெறுப்பார் உள்ளார்!
விண்ணினை
வெறுப்பார் உள்ளார்!
விருந்தினை வெறுப்பார் உள்ளார்!
கண்ணினை
நிகா்த்த பாட்டில்
கலந்துள பிழையை நீக்கு!
18.12.2012
--------------------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
மணிச்சரம்
மின்னும்! மலா்ச்சரம் மின்னும்!
அணிச்சரம்
மின்னும் அணிந்து! - பணிந்தேன்
கலைச்சரம்
மின்னும் கவிச்சரச் சீனி
வலைச்சரம்
மின்னும் வளா்ந்து!
18.12.2012
--------------------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
அழியும்
உலகம் என்றேதான்
அளித்த கவிதை மிகநன்று!
பொழியும்
மழைபோல் கவிதைகளைப்
புனையும் புலவா்! வணங்குகிறேன்!
மொழியும்
இனமும் இருவிழிகள்!
மூச்சுக் காற்றுக் கவிஎன்பேன்!
வழியும்
வகுத்து வாழ்கின்றார்!
வாழ்க! வாழ்க! பல்லாண்டே!
18.12.2012
--------------------------------------------------------------------------------------------------------
வணக்கம் ஐயா !
RépondreSupprimerதொடரும் கவிப்பூக்களால் தங்கள் தளம் மென்மேலும் வளம் பெறட்டும் .
படித்தேன்
RépondreSupprimerரசித்தேன்
மகிழ்ந்தேன்
நன்றி ஐயா
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...
RépondreSupprimerகவிதை உங்களுக்கு கை கட்டி சேவகம் செய்கிறது .வாழ்த்துக்கள் ஐயா!
RépondreSupprimerதேனெனத் தித்திக்கும் தீந்தமிழ்ப் பாக்களே
RépondreSupprimerநானென்ன மேலும் சொல!
அத்தனையும் அருமை!
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!
nanri.
RépondreSupprimerவீட்டிலிருந்தபடியே தையல் கலை கற்று கொள்ள எங்கள் இணைய தளத்தை பார்வை இடவும் .இணைய முகவரி http://jayamdesigner.blogspot.in/ .இந்த தகவலை உங்கள் நண்பர்களுடன் share செய்யவும் . நன்றி
வணக்கம்
RépondreSupprimerஐயா
தமிழில் இசைபாடும் கவிப்பூக்கள் அருமை வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசித்தேன்...
RépondreSupprimerதொடருங்கள் ஐயா...
வாழ்த்துக்கள்.
RépondreSupprimerவலையில் வடித்த வளா்தமிழ்ப் பாடல்
சிலையின் அழகாய்ச் சிரிக்கும்! - மலையில்
விரைந்திறங்கும் நீா்ப்பெருக்கோ உன்றமிழ் வேகம்!
விரைந்திரங்கும் காதல் விளைத்து
அனைத்தும் அமுதே
RépondreSupprimerஇனிதாய் தந்து அழகாய்
கவிதை படைத்திட சொல்லி
தவறு நீக்கியும் உளமார
ஊக்கமும் கொடுக்கும்
உன்னத கவியே
பொழியும் ஒளியில்
மகிழ்வோம் நாமே.
வாழ்க வளமுடன் ....!