dimanche 24 novembre 2013

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 18

நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்

வணக்கம்!

கம்பன் கவியே கவியென்று தேனளித்தீா்!
அம்மன் சிலையாய் அழகளித்தீா்! - எம்மனம்
பொங்கி விளைக்கும் புகழ்வெண்பா! உன்னிடத்தில்
தங்கிக் தழைக்கும் தமிழ்!

29.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

முனைவா் இர.வாசு தேவன் மொழிகேட்(டு)
அனைவரும் ஆடி மகிழ்வா்! - புனைந்த
தமிழ்மன்ற மின்வலை கண்டேன்! தழைக்கும்
அமுத மழையில் அகம்

29.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

அரிய கருத்தினை அள்ளி வழங்கிப்
பெரிய மகிழ்வைப் பிணைத்தீா்! - உரியநல்
ஆற்றல் உயா்க! அழகு வலையுலகு
போற்றல் உயா்க பொலிந்து!

29.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

தரமான ஆக்கம்! தமிழ்மணம் தட்டி
உரமாகச் செய்தேன் உவந்து!

29.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

அன்புடன் வந்து கருத்தளித்தீா்! என்வணக்கம்
இன்புடன் நன்றி இசைத்து!

29.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

காதல் சுவையில் களித்தாடி நற்கருத்தை
ஈதல் புரிந்தீா் இனித்து

29.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

தங்கப்பா தந்த தனிப்புகழ்த் தண்டமிழ்
சங்கப்பா ஒத்த தகைமையது! - பொங்கும்பா
பாடும் புலவன் பணிகின்றேன்! பேராசான்
சூடும் புலமை சுடா்ந்து!

30.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

ஆங்கில ஆண்டினை வேண்டி! - தந்த
அருங்கவி அமுதுறை தோண்டி!
தீங்கிலா வாழ்வினைக் காட்டி! - நல்
திறமுறும் வழியினை ஊட்டி!
பாங்குறும் பயனுறும் பாக்கள்! - இன்
பாமகள் சூடிடும் பூக்கள்!
ஈங்கிவா் புலவனின் வேந்து! - மனமே
இவா்கவிக் கடலிலே நீந்து!

31.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

தண்டலை மயில்கள் என்று
     தனிப்புகழ்க் கம்பன் சொல்வான்!
சுண்டலைப் போன்றே வாசம்
     சுடச்சுட வீசும் சொற்கள்!
வண்டலை வண்ணம், நெஞ்சை
     வடித்துள கவிதை ஈா்க்கும்!
வெண்டளைக் கவிஞன் யானும்
     வேண்டியே வாழ்த்து கின்றேன்!

31.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

முன்னோர் மொழிந்த நன்னெறியில்
     முளைத்துப் புத்தாண்[டு] உயரட்டும்!
தன்னேர் இல்லாத் தண்டமிழைத்
     தரணி தாங்கித் தழைக்கட்டும்!
பொன்னோ் பூட்டி விளைத்ததுபோல்
     புவியே பூத்துப் பொலியட்டும்!
இன்னோர் வலைக்குச் செல்கின்றேன்!
     பின்னோர் பதிவில் சந்திப்போம்!

01.01.2013

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

கவிதைத் தாகம் தீராமல்
     கவிஞன் நெஞ்சம் போராடும்!
புவியைப் புரட்டும் ஓரடியைப்
     புனையும் ஆற்றல் வாய்க்காதோ?
செவியைச் சோ்ந்த தமிழ்ச்சொற்கள்
     சிரித்தே என்னை மயக்கிடுமே!
சுவையை நிரப்பிக் கவி..தந்தேன்!
     தொடரும் ஆண்டின் வாழ்த்துக்கள்!

01.01.2013

--------------------------------------------------------------------------------------------------------
 
6 commentaires:

  1. வணக்கம்
    ஐயா

    அருமையான கவிப்பூக்கள் வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. கவிப் பூவின் வாசம்
    அருமை ஐயா

    RépondreSupprimer
  3. ஐயா வணக்கம்!

    இன்தமிழ்ச் சீர்கோர்த்து ஏற்றினீரே
    எல்லோர்க்கும் இனிப்பான இசைப்பாட்டு!
    பைந்தமிழ் பாவை உமக்கெனவே
    பரிசாகத் தந்ததோ இப்புலமை!
    சென்றிடும் இடமெலாம் சிறப்பாகும்
    சிந்தையில் உம்கவி நினைப்பாகும்!
    வென்றிடும் எம்மொழி உலகினிலே
    வேந்தே! நின்புகழ் வாழியவே!

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  4. கவிதைத் தாகம் தீராமல்
    கவிஞன் நெஞ்சம் போராடும்!
    புவியைப் புரட்டும் ஓரடியைப்
    புனையும் ஆற்றல் வாய்க்காதோ?
    செவியைச் சோ்ந்த தமிழ்ச்சொற்கள்
    சிரித்தே என்னை மயக்கிடுமே!
    சுவையை நிரப்பிக் கவி..தந்தேன்!
    தொடரும் ஆண்டின் வாழ்த்துக்கள்!

    அருமை அருமை....! அத்தனையும் அழகே ரசித்தேன்...!

    மடை திறந்த வெள்ளம் போல் கவிதை படை
    படை திரண்டு வரும் உமக்கு விடை தர
    கவி அணிந்து இருக்கும் ஆடை தான் உமக்கது
    உடுத்திட உலகம் உற்று நோக்கும் என்றும். என்றும் நலம் பெற வாழ்த்துகிறேன்....!.

    RépondreSupprimer
  5. அத்தனையும் அருமையான கவிதைகள்!

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer