jeudi 28 novembre 2013

தும்பிக்கை யால்எனைத் தூக்கு!




தும்பிக்கை யால்எனைத் தூக்கு!
 
வெற்றி விநாயகனே! வேழ முகத்தவனே!
முற்றி வரும்வினையை முற்றும் முடிப்பவனே!
பற்றிக் கிடக்கும் பழியகல உன்னடியை
ஒற்றிக் கிடக்க உதவு!

எம்பிக் குதிக்கும் இருவினைகள்! நூல்முடியில்
தும்பி துடிக்கும் பெருந்துன்பம்! - செம்பொருளே!
நம்பி..கை ஏத்துகிறேன்! அம்பிகை மைந்தனே
தும்பிக்கை யால்எனைத் தூக்கு!

அம்மி கிடக்கும் அசையாமல்! ஆடியே
கும்மி அடிக்கும் கொடுந்துயரம்! - அம்மம்மா!
நம்பிக்கை வைத்தேன் நகர்ந்தன தீவினைகள்
தும்பிக்கை என்றன் துணை!

10.09.2010 
 

12 commentaires:

  1. வணக்கம்
    ஐயா

    அம்மி கிடக்கும் அசையாமல்! ஆடியே
    கும்மி அடிக்கும் கொடுந்துயரம்! - அம்மம்மா!
    நம்பிக்கை வைத்தேன் நகர்ந்தன தீவினைகள்
    தும்பிக்கை என்றன் துணை!

    அருமையான வரிகள்.... வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. அம்மி கிடக்கும் அசையாமல்! ஆடியே
    கும்மி அடிக்கும் கொடுந்துயரம்! - அம்மம்மா!
    நம்பிக்கை வைத்தேன் நகர்ந்தன தீவினைகள்
    தும்பிக்கை என்றன் துணை! அருமை ...!

    நம்பிக்கை வைத்தாலே போதும் தும்பிக்கையான் துணை இருப்பான் எப்போதும்.
    நன்றி வாழ்த்துக்கள்....!

    RépondreSupprimer
  3. தினமும் மனம் கசிந்து
    வேண்டத் தக்க அற்புதமான துதிக்கவிகள்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    RépondreSupprimer
  4. மிகவும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  5. தும்பிக்கையால் நம்பிக்கையாக காக்கும்
    வேழமுகத்தானைப்பற்றி அருமையான பாடல் .பராட்டுக்கள்..!

    RépondreSupprimer
  6. "தும்பிக்கை என்றன் துணை!" என
    அழகாக விநாயகரை நம்ப வைத்தீர்!

    RépondreSupprimer
  7. வணக்கம் ஐயா!

    பொங்கும் கொடுவினை போக்கிடு என்றுருகி
    இங்குநற் பாக்களால் ஏற்றினை! - தங்குவோர்
    உள்ளத் துயரம் ஒழித்திடுவான் ஆனைமுகன்
    கொள்ளும் மனமும் குளிர்ந்து!

    இனிய நல்ல வெண்பாக்காளால் வேழமுகத்தோனை
    வேண்டிப் பாடினீர்கள். மனமுருகக் கண்கள் பனித்தன ஐயா!
    மிக அருமை!

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
  8. விநாயகர் ,மேல் நம்பிக்கை உண்டாக்கும் அழகான பாடல். பாராட்டுக்கள்.

    RépondreSupprimer
  9. வினைதீர்க்கும் விநாயகனை வேண்டிப்
    பொழிந்த கவிதை மழை மிக அருமை!

    அனைவருக்கும் வினைதீர அருள்வான்.!

    வாழ்த்துக்கள் கவிஞரே!

    RépondreSupprimer

  10. கொஞ்சும் குளிர்தமிழில் கோடிக் கவிபாட!
    விஞ்சும் புகழில் விளையாட! - நெஞ்சத்துள்
    வெள்ளையார் என்று விழுமிய சீா்சூட!
    பிள்ளையார் கால்கள் பிட

    RépondreSupprimer