கூடிவாழ்வோம்
செந்தமிழ்ப் புகழினைக் காத்திடுவோம் - தமிழ்
செழித்திடப் பாமலர் கோர்த்திடுவோம்!
சிந்தையில் நன்னெறி சமைத்திடுவோம் - நாடு
சிறந்திட நல்வழி அமைத்திடுவோம்!
வறுமையை வேருடன் நீக்கிடுவோம் - கொடும்
மடமையாம் நோய்தனைப் போக்கிடுவோம்!
கடமையால் மேன்மையைத் தேக்கிடுவோம் - நாம்
கற்றவர் வழியை நோக்கிடுவோம்!
விலையதின் உயர்வையே குறைத்திடுவோம் - நன்கு
விலைப்பொருள் பெருகிட உழைத்திடுவோம்!
மலையென ஒற்றுமை வளர்த்திடுவோம் - கூடி
மகிழ்வுடன் அனைவரும் வாழ்ந்திடுவோம்!
03.02.1980
ஒற்றுமை. இன்றைய அவசியத் தேவை ஐயா. நன்றி
RépondreSupprimerவணக்கம் !
RépondreSupprimerகூடி வாழ இலகு தமிழில் இனிமையாய் எடுத்தியம்பியவை அருமையே...!
இனிய கவிதை...!
நன்றி தொடர வாழ்த்துக்கள்...!
உணர வேண்டிய கருத்துள்ள வரிகள் ஐயா...
RépondreSupprimerவாழ்த்துக்கள்...
அருமையானக் கவிதைக்கு நன்றி ஐயா
RépondreSupprimerஒற்றுமை ஒன்றே உயர்வாக என்றுமே
RépondreSupprimerபற்றிடக் காணும் பலம்!
ஐயா!..
தங்களின் இசைப்பாடலை `செந்தமிழ் நாடெனும் போதினிலே’ பாடல் மெட்டில்
பாடிப்பார்க்க அற்புதமாக இனிமையாக இருக்கிறதையா!
ஆழ்ந்து ரசித்தேன்! அருமை!
என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும் ஐயா!
கவிதை அருமை...
RépondreSupprimerவாழ்த்துக்கள்.
RépondreSupprimerஒற்றுமை ஊட்டும் உயா்தமிழ்ப் பாட்டிதை
நற்றுணை யாகநாம் கொண்டிடுவோம்! - முற்றும்
பகைபறந் தோடும்! படா்தமிழ் ஓங்கு
வகைசிறந் தாடும் வளா்ந்து!
வணக்கம்
RépondreSupprimerஐயா
மலையென ஒற்றுமை வளர்த்திடுவோம் - கூடி
மகிழ்வுடன் அனைவரும் வாழ்ந்திடுவோம்!
அருமையான வரிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை.....வாழத்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-