lundi 25 novembre 2013

தமிழ்ச்தேசியத் தலைவா்




தமிழ்ச்தேசியத் தலைவா்

எடுப்பு

தமிழொளி பாயுது கதிர்போலே! – எம்
தலைவனின் மறமொளிர் மதியாலே!

தொடுப்பு

அழகொளிர் தமிழே! செம்மொழியே! – புக
ழார்பிரபா கரனின் கண்ணொளியே!

முடிப்புகள்

நான்பெரிது! நீபெரிது! இனிப்போதும்! – நம்
நாடுபெரி தெனக்கொண்டால் புகழ்மோதும்!
வான்பெரிது! கடல்பெரிது! கவியோதும்! – வளர்
வண்டமிழின் சுவைபெரிது! இணையேதும்?

தமிழென இனித்திடும் வன்மறவன்! – பெற்ற
தாயென அணைத்திடும் அன்பிறைவன்!
இமையெனக் காத்திடும் நற்றலைவன்! – உயிர்
இனமென வாழ்ந்திடும் பொன்னிலவன்!

சிங்களப் பேய்களை ஓட்டினனே! – தன்
சிந்தையில் பெருங்கனல் மூட்டினனே!
பொங்கிடும் புகழ்வழி தீட்டினனே! – புவிக்குப்
பூந்தமிழ் வீரத்தைக் காட்டினனே!

நிகரிலா நெஞ்சனைப் பாடுகிறோம்! – எம்
நினைவெலாம் தலைவனைச் சூடுகிறோம்!
அகமெலாம் ஈழமே...! ஆடுகிறோம்! – வீரம்
ஆர்த்தெழப் புலிநடை போடுகிறோம்!

தமிழ்த்தேசியத் தலைவா் பொன்விழா மலா் 2004

9 commentaires:

  1. வீரர்கள் வீழ்ந்துபோகலாம், வீரம் வீழ்வதில்லை. நெஞ்சுக்கு உரமாகி அடுத்த தலைமுறையை கொள்கைவழியில் அது நெறிப்படுத்தும். அற்புதமான கவிதை.

    RépondreSupprimer
  2. வணக்கம்
    தமிழில் இசைபாடும் கவிஞர் ஐயா
    தமிழ் இனத்தின் தலைவனுக்கு சாத்திய கவிதையின் ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு அர்த்தங்கள்......புரிகிறது... அருமை வாழ்த்துக்கள் ஐயா..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  3. வணக்கம் ...!
    தமிழென இனித்திடும் வன்மறவன்! – பெற்ற
    தாயென அணைத்திடும் அன்பிறைவன்!
    இமையெனக் காத்திடும் நற்றலைவன்! – உயிர்
    இனமென வாழ்ந்திடும் பொன்னிலவன்! அருமை அருமை ....!

    பொன்னிலவனை புகழ் பாடி
    பூங்கவிதையும் சூடி
    பொங்கிடும் புகழ் வழி தீட்டிய அருங்கவியே வாழ்க வாழ்க ...!

    நன்றி வாழ்க வளமுடன் ...!

    RépondreSupprimer
  4. வீரமிகு வரிகள் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  5. வணக்கம் ஐயா!..

    தங்கும் புகழ்மாறாத் தானைத் தலைவனை!
    எங்கள் இனத்தின் இறைவனை! - பொங்கும்
    கடலலையாய்ப் போற்றுங் கவியே! உளமும்
    உடலும் சிலிர்த்தே னுவந்து!

    உங்களின் உணர்வுக் கவியில் உறைந்திட்டேன் ஐயா!

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer
  6. நிகரில்லாத் தலைவனவன்!
    நெஞ்சினில் இருக்கும் மறவனவன்!

    அழகிய படமும் அதற்கேற்ப உங்கள் கவிப் படைப்பும் அருமை!

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  7. தமிழன் என்று சொல்வோம் !
    ஒரு நாள் தலைநிமிர்த்து
    செல்வோம்,வெல்வோம்!

    RépondreSupprimer
  8. வீரனைப் போற்றும் வீரமிகு வரிகள்...
    அருமை ஐயா.

    RépondreSupprimer
  9. "நிகரிலா நெஞ்சனைப் பாடுகிறோம்! – எம்
    நினைவெலாம் தலைவனைச் சூடுகிறோம்!" என்ற
    அடிகளை வரவேற்கிறேன்!

    RépondreSupprimer