jeudi 21 novembre 2013

நிலவின் விடுமுறை..




நிலவின் விடுமுறை..

அன்று நிலவின் விடுமுறையாம்!
     அவளைக் காணும் நள்ளிரவாம்!
என்றும் இல்லா இருள்சூழ்ந்தே
     எதிரில் உள்ளார் யாரென்றே
நன்றாய் உருவம் தெரியலையே!
     நலமே இதுவும் எனவெண்ணி
என்றன் மங்கையிடம் சென்றேன்
     இறுகப் பிடித்தே அணைத்தனனே!

அய்யோ பாவி எனைவிடடா
     அகவை அறுப(து) ஆகுதடா!
மெய்யே நடுங்கி அவன்நின்றான்!
     மெல்ல அவனின் பெயர்சொன்னான்!
பொய்யாய்ப் பாட்டி நடித்தபடி
     போனாள் அந்த இடம்விட்டே!
செய்யாள் வந்தாள் சிரித்தபடி
     செயலைக் கிழவி செப்பியதால்!

21.10.1995
 

9 commentaires:

  1. பொய்யாய் நடித்தாளா பாட்டி....?
    ஒரு சமயம்
    நீங்கள் தெரிந்தே செய்தது
    பாட்டிக்குத் தெரிந்துவிட்டு இருக்குமோ?!

    ஹா ஹா ஹா....

    RépondreSupprimer
  2. வணக்கம்
    ஐயா

    அய்யோ பாவி எனைவிடடா
    அகவை அறுப(து) ஆகுதடா!

    கவிதை நன்றாக உள்ளது ஐயா.... என்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை......வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  3. ஆகா... அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  4. சிரிக்கவும் தந்தீர்நற் சீரொடு பாக்கள்
    விரித்த புலமை வியப்பு!

    மிகவும் ரசித்தேன்!
    நகைச்சுவையுடன்அருமையான நயமான சீர்களுடன்
    அறுசீர் விருத்தம் அற்புதம்!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துகளும் ஐயா!

    RépondreSupprimer
  5. பாட்டி ஒரு நல்ல பாட்டி :))

    RépondreSupprimer
  6. இத்தனை இயல்பாய் நகைச்சுவையைக்கூட
    கவிச்சுவையாய் தந்துள்ளீர்கள். மிக அருமை!

    ஆளைமாற்றி ஆச்சியை அணைத்ததை நினைத்துச் சிரித்தேன்..:)

    வாழ்த்துக்கள் கவிஞர் அவர்களே!

    RépondreSupprimer
  7. இப்படி எல்லாம் நடந் ததுவா?
    இதைஏன் மறைத்தீர் இத்தனை நாள்?
    செப்பியதுண்டா மனையாள் முன்?
    'செமை'யாய்த் தருவார், சாக்கிரதை!

    -கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    RépondreSupprimer
  8. நிலவுக்கு யார் விடுமுறை கொடுத்தது. இது அவசியமா.

    செய்யாள் வந்தாள் சிரித்தபடி
    செயலைக் கிழவி செப்பியதால்! தப்பியது தலை..!

    நன்று நன்று ரசித்தேன்,சிரித்தேன். வாழ்த்துக்கள்...!

    வாழ்க வளமுடன்...!

    RépondreSupprimer