vendredi 2 mai 2014

மேதினி போற்றும் மே





மேதினி போற்றும் மே!

பாடுபடும் பாட்டாளி வாடுதுயர் நீக்கியநாள்!
தேடுநலம் தந்த திருநாள்..மே! - ஏடுபுகழ்ந்து
ஏத்தும்! உரிமையைச் சாற்றும்! இனிமைதரும்
கூத்தும் இசைக்கும் குளிர்ந்து!

பட்ட துயரங்கள் பஞ்சாய்ப் பறந்தனவே!
கொட்டம் அடித்தோர் குனிந்தனரே! - கெட்டவா்
துாதினை நீக்கிய..நாள்! தொல்லைகளைப் போக்கிய..நாள்!
மேதினி போற்றுகின்ற மே!

02.05.2014

14 commentaires:

  1. மே தின சிறப்புக் கவிதை
    மிக மிக அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாடுபடும் பாட்டாளி பட்டதுயா் போக்கிச்
      சூடுநல மேநாளைச் சொல்லு!

      Supprimer

  2. மேதினி போற்றும்நாள்! மேன்மை தரும்நன்னாள்!
    ஏதினி துன்பம்? இணைந்திடுக! - ஊதுக
    சங்கொலி! இன்பத் தமிழொலி! ஏந்துக
    செங்கொடி நம்தோள்கள் சோ்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நா..தரும் சொல்லழகைக் கா..தரும் பூவழகைக்
      கோ..தரும் பால்சுவையைக் கொண்டதுவாம் - மே..தரும்
      இன்பம்! உழைக்கும் இதயத்துள் சீா்பாடி
      என்றும் இனிக்கும் இருந்து!

      Supprimer
  3. மே தின வாழ்த்துக்கள் ஐயா

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உழைக்கும் மனிதாின் உள்ளத்துள் இன்பம்
      நுழைக்கும் திருநாளை நோக்கு!

      Supprimer
  4. வணக்கம் !
    சிறப்பான மே தினக் கவிதை கண்டு ரசித்தேன் வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      துயா்துடைத்த மே..நாளைத் தோழா! உலகுக்கு
      உயா்வளித்த மே..நாளை ஓது
      !

      Supprimer
  5. மேநாள் குறித்த மிகஇனிய வெண்பாக்கள் அய்யா.
    நன்றி சொன்ன தமிழ்ச்செல்வன் வெண்பாவும் நன்று தொடர்க.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      முத்து நிலவன் மொழிந்த கருத்துக்கள்
      கொத்து மலா்களெனக் கூறு!

      Supprimer
  6. "பாடுபடும் பாட்டாளி வாடுதுயர் நீக்கியநாள்!
    தேடுநலம் தந்த திருநாள்..மே!" எனப் பாடிய
    சிறந்த பாவை விரும்புகிறேன்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      யாழ்ப்புலவா் தந்த இனிய எழுத்துக்கள்
      சூழ்நலம் நல்கும் சுநந்து!

      Supprimer
  7. Réponses

    1. வணக்கம்!

      மேதினி போற்றுகின்ற மே..திருநாள் இல்லையெனில்
      ஏதினி இன்பம் இயம்பு!

      Supprimer