vendredi 16 mai 2014

மலரா? நிலவா?




மலரா? நிலவா?

எடுப்பு

உன்றன் மொழியென்ன தேனா? - அன்பே
ஒளிரும் விழியென்ன மீனா?
                           (உன்றன்)

தொடுப்பு

மின்னும் முகமென்ன மலரா? - அந்த
விண்ணில் வலம்வந்த நிலவா?
                           (உன்றன்)

முடிப்பு

மெல்லிய பார்வையில் சொல்லிய பாக்கள் - என்
மேனியில் தோன்றுதே உணர்வெனும் பூக்கள்!
பல்லியல் கற்றுள பாவையுன் ஆக்கம் - நான்
படித்திடப் படித்திடப் பசியினைச் சேர்க்கும்!
                                           (உன்றன்)

கொஞ்சிடும் கிளியென விஞ்சியே நின்றாய் - தோப்பில்
கூவிடும் குயிலெனத் தமிழிசைக் கின்றாய்!
வஞ்சி..நீ கொஞ்சியே நெஞ்சினை வென்றாய் - பின்ஏன்
வாடிட வாடிடப் பிரிந்து..நீ சென்றாய்?
                                           (உன்றன்)

என்னடி உன்னெழில் பொன்னடி மின்னும் - உள்ளம்
இன்னடி கவிகளை இசையுடன் பின்னும்!
மின்னடி மீட்டியே நடைதரும் அன்னம் - என்னுள்
நன்வழி நல்கியே நலமெலாம் மன்னும்!
                                           (உன்றன்)
16.05.2014

9 commentaires:

  1. ரசித்தேன் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  2. அடடா, நீர் சொல்லிய விதமே
    என் இரு கண்களில் புகுந்து
    மனம் முழுவதும் இனிக்கிறதே-இந்த
    பாரதிதாசனின் கவிதையை ரசித்திட-அந்த
    பாரதி இங்கில்லாமல் போனது-நாம்
    வருந்திடும் நிலை அல்லவா?
    ஐயா மன்னிக்கணு உங்கள் பெயர் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
    உங்ககிட்டெல்லநான்கற்றுக்கொள்ளவேண்டியது கடலளவுஉள்ளது
    ஐயாநன்றி.

    RépondreSupprimer
  3. மீண்டும் மீண்டும் உரக்கப் படித்து ரசித்தேன்
    குறிப்பாக இயல்பாக வந்தமர்ந்த இயைபுத்தொடை
    மிக மிக அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  4. வணக்கம் !
    இனிமையான வரிகள் வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
  5. ரசனையான வரிகள்! அருமை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  6. ரசித்தேன்
    சுவைத்தேன்
    நன்றி ஐயா

    RépondreSupprimer
  7. சிறந்த பாடல் பகிர்வு

    RépondreSupprimer
  8. மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்.
    நலம் பல பெற்று வாழ்க பல்லாண்டு !

    RépondreSupprimer
  9. வஞ்சி..நீ கொஞ்சியே நெஞ்சினை வென்றாய்,,, அற்புதமான வரிகள் ஐயா.
    அன்புடன்
    Killergee
    www.killergee.blogspot.com

    RépondreSupprimer