vendredi 30 mai 2014

நல்ல மருந்து



கன்னியின் கண்கள் கவிதைப் பெருந்தோட்டம்!
பொன்னில் பதித்த புதுமுத்து! - இன்றமிழ்ப்
பாவலன் சொல்கின்றேன்! பாவையின் பார்வையோ
மாவளம் நல்கும் மருந்து!

30.05.2014

22 commentaires:

  1. Réponses

    1. வணக்கம்!

      நன்மருந்து தந்தேன் நலம்பெற உண்டுவப்பீா்!
      இன்விருந்து என்றே விரைந்து!

      Supprimer
  2. கவிதை எங்களுக்கு நல்விருந்து
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காலமெல்லாம் நின்று களிப்பேந்த இன்றே..நீ
      கோலக் தமிழ்விருந்தைக் கொள்!

      Supprimer
  3. Réponses

    1. வணக்கம்!

      ஒருசொல் எனினும் திருச்சொல் அளித்தீா்!
      அருந்சொல் விருந்தாம் அது!

      Supprimer
  4. தங்கள் கவி அருமை ஐயா

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கன்னியின் கண்களைக் கண்டு கவிபடைத்தேன்
      என்றன் உயிரை இசைத்து!

      Supprimer
  5. வெண்பளிங்கு நாணும் விளையாடும் வில்லாகிக்
    கண்களிங்குக் காதல் கதைபேசும்! - மண்விளங்க
    நின்ற நினது கவிதை நீராட்டில்
    வென்றதமிழ் திறக்கும் விழி!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அமுதக் கவிதைக்கு அடியவனின் நன்றி!
      குமுத மலா்கள் குவித்து!

      அன்னை விழிதிறந்து அன்புடன் பாா்த்ததனால்
      முன்னைக் கவிநடையை முற்றுற்றேன்! - பொன்னைப்
      பொழியும் புகழ்தமிழை நாம்காத்தால், வாழ்வில்
      வழியும் வளங்கள் வளா்ந்து!

      Supprimer
  6. துள்ளும் கயல்தோற்கத் தாக்கும் விழியாலே
    உள்ளம் உவக்கும் உணர்வானாய்! - முள்ளையும்
    பூவாக எண்ணுதே பூவை உனையென்னில்
    காவாது காக்குதே கண்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கண்ணன் திருவாயுள் கண்டுவந்த காட்சிகளை
      வண்ண விழியிரண்டும் வார்த்தனவே! - எண்ணத்துள்
      என்றும் நிலைத்திருக்கும் என்னவளின் கண்ணழகால்
      மன்னும் கவிகள் மலா்ந்து!

      Supprimer
  7. எழிலாடும் பாவெழுத ஏந்திழையின் கண்ணும்
    மொழியாகும் கந்தமிகு மொட்டு !

    அருமை அருமை கவிஞரே
    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
    8

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      விழியாடும் விந்தையினைக் கண்டு, புலவன்
      மொழியாடும் இன்பம் முளைத்து!

      Supprimer

  8. தோகை விழியசையத் தோன்றும் கவிதைகளைப்
    பாகைக் கரைத்துப் படைத்துள்ளீா்! - வாகையுடன்
    வந்தாளும் வண்ணக் கவிக்கோவே! எந்நாளும்
    தந்தாளும் பாக்கள் தழைத்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      மின்னல் விழிகளா? கன்னல் விழிகளா?
      பின்னல் விழிகளா? பெண்ணே!சொல்! - என்றென்றும்
      மாறாமல் வண்டு விழிகள் கணைதொடுக்கும்!
      தேறாமல் போகிறேன் தேய்ந்து

      Supprimer
  9. நல்ல மருந்தென்று நங்கையின் விழிவியந்தீர்கள் ஐயா!
    வெல்லமேதான்! வெண்பா விருந்து!

    வாழ்த்துக்கள் கவிஞரையா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      துள்ளும் விழிகளின் துாய மொழியனைத்தும்
      வெல்லும் வலையை விாித்து!

      பூங்கொடி தந்த புகழ்க்குறள் தேனனொழுகும்
      மாங்கனி என்பேன் மகிழ்ந்து

      Supprimer
  10. பாவையின் பார்வையில் காணும் குளிர்மை மருந்தாமோ

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாவையின் பார்வை படைக்கும் மருந்துண்டால்
      நாவில் சுரக்கும் நலம்

      Supprimer

  11. அடடா... அருமை அருமை.

    ஆனால் ஒரு சந்தேகம்.....

    பூமகள் கண்கள் புதுமுத்தே என்றோதி
    பாமகனே வெண்பா படைத்திட்டீர்! – சாமம்
    அழகொளிரும் ஆழ்கடலில் பூத்திட்ட முத்தில்
    பழமுத்தும் உண்டோ பகர்!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!

      மின்னும் விழியழகைக் கண்டு கவிபடைத்தேன்!
      இன்னும் பதிலுண்டு எழுதிடுவேன்! - என்னவள்
      புத்தம் புதியதாய் நித்தம் பொலிகின்றாள்!
      சித்தம் இழந்தேன் சிதைந்து!

      Supprimer