samedi 7 décembre 2013

காதல் விளைத்தவள்



காதல் விளைத்தவள்

எடுப்பு

காதல் வலையை விரித்தவளே - என்
கருத்தை முழுதும் சரித்தவளே!
                                       (காதல்)

தொடுப்பு

மோதல் விழியைத் தரித்தவளே - எனை
மோக அலையால் அரித்தவளே!
                                       (காதல்)

முடிப்பு

கோடி மலர்கள் கொஞ்சும் முகத்தழகே! - அக்
கோதை இராதை கொண்ட அகத்தழகே!
பாட அழைக்கும் பவள நகத்தழகே! - பெரும்
பசியைக் கொடுக்கும் பருவச் சுகத்தழகே!
                                       (காதல்)

வா..வா.. என்றே மயக்கும் பட்டழகே - நலம்
தா..தா.. என்றே தழைக்கும் மெட்டழகே!
ஆ..ஆ.. என்றே அழைக்கும் பொட்டழகே - உயிர்
மாமா.. என்றே அணைக்கும் கட்டழகே!
                                       (காதல்)

போதை கொடுக்கும் பூந்தேன் சொல்லழகே - என்
பாதை தடுக்கும் பார்வை வில்லழகே!
வாதை தொடுக்கும் வரிசை பல்லழகே - கவி
மேதை அடுக்கும் வெண்பா நல்லழகே!
                                       (காதல்)

கண்ணில் கமழும் கருணைப் பேரழகே! - என்
கவியில் கமழும் கன்னல் சீரழகே!
எண்ணில் கமழும் இளமைத் தேரழகே! - என்
இதயம் கமழும் உன்போல் யாரழகே!
                                       (காதல்)

07.12.2013

11 commentaires:

  1. அற்புதக் கவிதைகள் விளையக்
    காரணமானவள் நீடூழி வாழ்க
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  2. கண்ணில் கமழும் கருணைப் பேரழகே! - என்
    கவியில் கமழும் கன்னல் சீரழகே!
    எண்ணில் கமழும் இன்தேன் தேரழகே! - பொன்
    இளமை கமழும் உன்போல் யாரழகே!

    அடடடடடா.... அருமை.
    ரொம்ப காலத்திற்குப் பிறகு அழகான கவிதை உங்களிடமிருந்து...!!
    தொடருங்கள் கவிஞரே...
    பிறகு வயது போய்விட்டால் காதல் கவிதை எழுத வராதாம்!

    (ஒரு சமயம் இப்பொழுதே ரொம்ப லேட்டோ...)

    RépondreSupprimer
  3. வா..வா என்றே மயக்கும் வைக்கும் வரிகள் ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  4. காதல் விளைத்தவள் அருமை!

    ஒரு சினிமாப் பாடல் மெட்டோடு இசைத்துப் பாட
    மிக நன்றாக வருகிறதே.
    ஒவ்வொரு வரியிலும் ஆழ்ந்து ரசிக்க
    அற்புதமான சொற்கள். ரசித்தேன் நானும்..:)

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  5. வணக்கம்
    ஐயா
    சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

    எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன்... உங்களை அழைக்கிறது..http://tamilkkavitaikalcom.blogspot.com

    RépondreSupprimer
  6. அழகான கவிதை.
    வாழ்த்துக்கள் ஐயா.

    RépondreSupprimer
  7. அருமையான கவிதை ஐயா வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  8. வணக்கம் ஐயா!...

    அடங்காத பேரழகு ஆசைபன்
    மடங்காகும் சீரழகு சந்தமுடன்
    படங்காட்டும் பாவழகு மயக்கியே
    தடங்காமல் தகர்கின்ற சிறப்புத்தாமே!

    வார்த்தைகள் இல்லை ஐயா!
    வியப்பு மட்டுமே என்னிடம்...
    மிக மிக அருமை! ரசித்தேன்!

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  9. மயக்கும் அழகில் மயங்கி
    பாங்காய் கவிதை வடித்து
    பண்புடனே படைத்தாய் நன்றே..!

    நன்றி தொடர வாழ்த்துக்கள் ....!

    RépondreSupprimer
  10. வணக்கம் அய்யா...

    அற்புதமான கவிதை...

    RépondreSupprimer