mardi 17 décembre 2013

இதழ் குவி வெண்பா




இதழ் குவி வெண்பா

உருகுசுவை பாவோ? பெருகுசுவை நூலோ?
பருகுசுவை பாலோ!பூம் பாவை - உருவம்!பாப்
பாடும் புதுமைமிகும்! சூடும் பெருமைமிகும்!
கூடும் முதுமைவிடும் கூறு!

இலக்கணம்

உதடுகள் குவித்தும் ஒட்டியும் பாடும் கவிதை.

இதழ் அகல் வெண்பாவில் வரக்கூடா , , , , ஓள
 , , ஆகிய எழுத்துக்கள் இவ்வெண்பாவில் 
 வந்து விளையாடும்.

இதழ் அகல் வெண்பாவில் வந்து நடைபோடும் எழுத்துக்கள் இவ்வெண்பாவில் வரக்கூடா.

இதழ் குவி வெண்பாவில் வரும் எழுத்துக்கள்

உகர ஊகார எழுத்துக்கள்
(, , கு, கூ, 10, சு, சூ டு, டூ, ணு, ணூ, து, தூநு, நூ,  
யு, யூ, ரு, ரூ, லு, லூ, ழு, ழூ, ளு, ளூ, று, றூ, னு, னூ)
  
ஒகர, ஓகார, எழுத்துக்கள்
(கொ, கோ, ஙொ, ஙோ, சொ, சோ, ஞொ, ஞோ
 டொ, டோ, ணொ, ணோ, தொ, தோ, நொ, நோ
 யொ, யோ, ரொ, ரோ, லொ, லோ, ழொ, ழோ,  
ளொ, ளோ, றொ, றோ, னொ, னோ)

ஓளகார எழுத்துக்கள்
(ஓள, கௌ, ஙௌ, சௌ, ஞௌ, டௌ, ணௌ,  
நௌ, யௌ, ரௌ, லௌ, ழெள, ளௌ, றெள, னௌ)

பகர இனம்
, பா, பி, பீ, பு, பூ, பெ, பே, பை, பொ, போ, பௌ, ப்.

மகர இனம்
, மா, மி, மீ, மு, மூ, மெ, மே, மை, மொ, மோ, மௌ, ம்.

வகர இனம்
, வா, வி, வீ, வு, வூ, வெ, வே, வை, வொ, வோ, வெள, வ்

16.12.2013

7 commentaires:

  1. தூவிக் குவித்த பூக்குவியல்
    கூட்டிப் பெருக்கி பார்கின்றேன்
    கூடையில் போட்டு குவிக்கின்றேன்
    மாலை சூடி மகிழ்ந்திடவே

    வான் மழை பொழிகின்றீர்
    முழுதும் நான் நனைகின்றேன்.
    பேருவகை கொண்டேன்
    பெருமைகள் பல பெறுக..!
    மிக்க நன்றி ஐயா...! தொடர வாழ்த்துக்கள்...!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      முன்னே வருகைதந்து முத்தாய்க் கருத்தளித்தீா்
      சொன்னேன் நனிநன்றி சூழ்ந்து!

      Supprimer

  2. இதழ்குவி வெண்பா இனிமை அளிக்கும்
    புதிராக என்னுள் புகுந்து

    RépondreSupprimer
  3. வணக்கம் ஐயா!

    ஆச்சரியமும் ஏக்கமும் ஒன்றாக என்னை விரட்டுகிறது.
    இப்படியெல்லாம் இயற்றிட உங்களால்தான் முடியும் ஐயா!

    உங்களை என் தமிழாசிரியராக - கவியாசிரியராக அடைந்தமை
    எனக்குப் பெரும் பேறுதான்.

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    ======================================

    ஐயா!... நீங்கள் பதிவேற்றியதை கண்ணுற்று அதன்பின் கிடத்தட்ட
    2 மணித்தியாலங்களுக்கு மேலாக முனைந்து
    ஒரு இதழ் குவி குறட்பா எழுதியுள்ளேன்.

    பேரும் பெருகும் புவிமீது! உம்மோடு
    ஊருமே வாழுமே ஒப்பு!

    பேரும் - பெயர்
    ஒப்பு - சம்மதித்தல், உடன்படல் என பொருள் பெறுகிறது.
    மிக்க நன்றி ஐயா!.. தொடருங்கள் மேலும்!...

    RépondreSupprimer
  4. இலக்கண விளக்கம் மிகவும் அருமை ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  5. மூடித் திறந்து...
    இதழோடு போராட்டம்.. காலங்காலமாய்.:)

    மிக அருமை! நான் மத்தியில் இருந்து பார்க்கின்றேன்.
    கவிஞர்களும் எல்லோரும் ஆரவார முழக்கம் செய்வதை!

    வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! கவிப்பேரரசே!

    RépondreSupprimer
  6. ஐயா இதைப் பற்றி எல்லாம் கேள்விப் பட்டதே இல்லை. . தாங்கள் ஒரு கவிப்பெட்டகம்

    RépondreSupprimer