நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்
வணக்கம்
எண்ணம் சிதறா எழிலார் படங்களை
வண்ண வலையினில் வை!
மார்பு தெரிகின்ற மாதை அகற்றுக!
சோர்ந்தேன் மனமும் சுருண்டு
11.01.2013
--------------------------------------------------------------------------------------
வணக்கம்!
கலையன்பன் தந்த கவிபடித்தேன்!
மின்னும்
வலையன்பன் என்பேன் மகிழ்ந்து!
11.01.2013
--------------------------------------------------------------------------------------
வணக்கம்
காலத்தின் கோலத்தைக் காட்டும்
கவிபடித்தேன்!
ஞாலத்தை என்சொல்ல? என்நண்பா! -
ஓலமேன்?
ஆலத்தை ஒத்தவா்நாம்! ஆா்த்தெழுந்து
செந்தமிழின்
மூலத்தைக் காப்போம் முனைந்து!
மதிசுதா தந்த கவிபடித்தேன்! நெஞ்சுள்
பதிந்தே மிளிரும் பதிவு!
11.01.2013
--------------------------------------------------------------------------------------
வணக்கம்!
மரபின் மன்னன் பாரதியை
மறவா துரைக்கும் நன்னெஞ்சா்!
முரளி தரனார் தமிழ்ப்பற்றை
முழுதும் அறிந்து மகிழ்கின்றேன்!
குரலில் இனிமை பெற்றவா்கள்
கொடுக்கும் தேன்தான் இவா்பதிவு!
உரலில் கட்டுண்டு இருந்தவனே!
ஒளிரும் கண்ணா! காத்திடுக!!

இன்யாழ்க் கவிவாணா் இங்கே இசைகின்றார்
நன்யாப்பு தீட்டும் நறுந்தமிழை! - என்வணக்கம்!
சொந்தக் கவிமணக்கச் சூடும் மனமினிக்கச்
சந்தக் கவிமணக்கச் சாற்று!
11.01.2013
--------------------------------------------------------------------------------------
வணக்கம்!
அழகிய சொற்கள் அணிந்தன ஆடைகள்!
பழமாய் இனிக்கும் படைப்பு
அழகிய சொற்கள் அணிந்தன ஆடைகள்!
பழமாய் இனிக்கும் படைப்பு
12.01.2013
--------------------------------------------------------------------------------------
வணக்கம்!!
திங்களைப் போற்றித் திருக்குறள்
நன்னெறியில்
பொங்கலைப் போற்றியே பொங்கு!
12.01.2013
--------------------------------------------------------------------------------------
வணக்கம்!
விழிப்புணா்வை ஊட்டும் வியப்புமிகு
பக்கம்
மொழியுணா்வை ஊட்டும் முனைந்து!
12.01.2013
--------------------------------------------------------------------------------------
வணக்கம்!
நதியின் கரையில் நான்வந்து
நாயின்
கதையைப் படித்திட்டேன்!
விதியின் செயலோ? என்றெண்ணி
விருத்தம்
ஒன்று படைக்கின்றேன்!
மதியின் கரையை மீறுகிற
மழைபோல்
பதிவைப் பதித்துள்ளீா்!
ததியின் குளிர்ச்சி தருகின்ற
தமிழை
நாளும் வழங்குகவே!
12.01.2013
--------------------------------------------------------------------------------------
வணக்கம்!
இரண்டு பக்கம் விளக்கேற்றி
இரண்டு பக்கம் விளக்கேற்றி
இன்பத் தமிழால் ஒளிதந்தீா்!
திரண்டு வந்த நினைவுகளைத்
தேனில் குழைத்துச் சுவைசெய்தீா்!
உருண்டு பிரண்டு கிடந்தாலும்
உன்போல் வாய்ப்புக் கிடைத்திடுமோ?
அரண்டு மிரண்டு நிற்கின்றேன்!
அருமை மின்னல் வரிகளிலே!
திரண்டு வந்த நினைவுகளைத்
தேனில் குழைத்துச் சுவைசெய்தீா்!
உருண்டு பிரண்டு கிடந்தாலும்
உன்போல் வாய்ப்புக் கிடைத்திடுமோ?
அரண்டு மிரண்டு நிற்கின்றேன்!
அருமை மின்னல் வரிகளிலே!
12.01.2013
--------------------------------------------------------------------------------------
அருமையான கவிதைகள் ஐயா
RépondreSupprimerத.ம.2
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்...
RépondreSupprimerஅருமையான கவிதைகள்.......
RépondreSupprimerபகிர்ந்தமைக்கு நன்றி.
வலைப்பூக்களில் கவிப்பூ!
RépondreSupprimerஎங்களுக்கு மலைப்பு!!!
வாழ்த்துக்கள் அப்பு!.:)... வாழ்த்துக்கள் கவிஞரே!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerசிவப்பாய் நெருப்பாகிச் சிந்தனையிற் சீராய்
உவப்பாய் ஒளிர்ந்திடும் பூ!
மிக அருமையான கவிப்பூக்கள்!
இவைகளிலேயே சிறந்த செய்திகளை
எமக்குத் தருகிறீர்கள் ஐயா!
என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!
வணக்கம்
RépondreSupprimerஐயா
சிறப்பான கவிப்பூக்கள் வாழ்த்துக்கள் ஐயா
இனியஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை ஐயா...
RépondreSupprimerவாழ்த்துக்கள்...