lundi 16 décembre 2013

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 20

நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்
 
வணக்கம்!

தேன்கிண்ணம் மின்வலையைத் தேடிவந்தேன்! போதையிலே
நான்கிண்ணம் ஏந்தினேன் நன்கு!

02.01.2013

----------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

ஆதிரா மின்வலையை அன்புடன் இன்றுநான்
ஓதி மகிழ்ந்தேன் உவந்து!

02.01.2013

---------------------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

பூந்தளிர் மின்வலை பூத்துப் பொலிக..பா
வேந்தரின் பற்றைப் விளைத்து!

02.01.2013

---------------------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

விளையாடி வெல்லும் வியன்தமிழைத் தீட்டிச்
சுளையாகத் தந்தாய் சுவை!

03.01.2013

---------------------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

எங்கும் ஊழல் கை..வீச!
     எல்லா செயலும் விலைபேச!
பங்கு போட்டே தாய்மண்ணைப்
     பாயாய்ச் சுருட்டும் அரசியலார்!
பொங்கும் நீதி தேவதையோ
     பொய்யின் கையில் அடைப்பட்டாள்!
சங்கே கொண்டு உரைத்தாலும்
     இங்கே விடியல் வந்திடுமோ?

03.01.2013

---------------------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

ஆயுத எழுத்தை ஏந்தி
     ஆா்த்தெழும் வலையைக் கண்டேன்!
பாயிரம் போன்றே நானும்
     படைக்கிறேன் விருத்தம் ஒன்று!
ஆயிரம் என்ன? கோடி
     அழகுடை வலைகள் ஒக்கும்!
தாயுறும் துன்பம் நீக்கத்
     தவித்திடும் தோழா வெல்க!

---------------------------------------------------------------------------------------------------- 

வணக்கம்

முத்து நிலவன் மொழிந்த கவிபடித்துக்
கொத்து மலரைக் கொடுக்கின்றேன்! - இத்தரையில்
ஆண்டான் அடிமையெனும் அண்ட புளுகையெலாம்
பூண்டோ(டு) எரித்துப் பொசுக்கு!

04.01.2013

---------------------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

அன்னை அவா்களுக்கு
அடியவனின் அன்பு வாழ்த்துக்கள்!

தாய்மடியில் தவழ்ந்தாட வேண்டும் என்று
     தந்த..கவி கண்ணுற்றேன்! மகிழ்ச்சி பொங்கச்
சேய்மடியில் சிரிப்பதுபோல் உன்றன் பாட்டுச்
     சீா்மடியில் செழித்தாடும்! புளிப்பை நல்கும்
காய்மடியில் நம்வாழ்வு கலக்கா வண்ணம்
     கனிமடியில் நமைஅமா்த்தி மகிழ்ந்த தெய்வம்!
வாய்மடியில் சுரக்கின்ற சொற்கள் யாவும்
     மாதாவின் கால்பட்ட மண்ணுக் கீடோ?

04.01.2013

---------------------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

நாட்டுப் புறத்தினிலே
நடந்துவரும் காற்றாகப்
பாட்டு நீ படிச்ச!
பாவலன் மயங்குகிறேன்!

ஆத்தங் கரையிரண்டும்
அம்மணமாய்க் கிடக்கிறதோ?
போத்தும் போர்வையெனப்
பூந்தமிழைப் போட்டாயோ?

ஒத்த ஓசையிலே
முற்றும் கவிபடைச்சே!
சுத்தும் இவ்வுலகம்
தட்டும் கைகளையே!

05.01.2013

----------------------------------------------------------------------------------------------------  

10 commentaires:

  1. அருமை ஐயா கவிப்பூ.

    RépondreSupprimer
  2. நண்பா்களின் வலைப்பூக்களில்
    என் கவிப்பூக்கள் -- வாழ்த்துகள்..!

    RépondreSupprimer
  3. அனைத்தும் அருமை...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  4. தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி... விளக்கம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

    RépondreSupprimer
  5. வலைப்பூக்கள் மணந்திடக் கவிப்பூவாய்ச் சொரிந்துள்ளீர்கள்.
    அத்தனையும் ஒன்றை ஒன்று மிஞ்சும் சுவை! அருமை!

    பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  6. வணக்கம் !
    வலைப் பூக்களின் தங்கள் கவிப் பூக்கள் கண்டு மகிழ்ந்தேன் .
    வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    RépondreSupprimer
  7. கவிஞரே அத்தனையும் மிக அருமை!
    ஆனாலும் இறுதியில் இருக்கும் நாட்டுப்புறக் கவிவடிவம்
    மனதில் இனிக்கிறது!

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  8. சிறந்த கவிதைத் துளிகள்

    RépondreSupprimer
  9. வணக்கம்
    ஐயா

    கவிப்பூக்கள் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  10. வணக்கம்
    ஐயா
    த.ம9வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer