samedi 21 décembre 2013

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 21

நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்

வணக்கம்!

புண்ணிய பூமி ஏனோ
பொய்யரின் கையில் போச்சி?
கண்ணிய கட்டுப் பாடு
காற்றிலே கரைந்து போச்சி!
பெண்ணிய உரிமை எண்ணிப்
பின்னிய கவிதை கண்டேன்!
தண்ணிய கவிஞன் என்னுள்
தக..தக மூளும் தீயே!

05.01.2013

------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

நல்ல கருத்தை நவின்றுள்ளாய்! மின்னுகிற
வெல்லும் வலையை விரித்து!

05.01.2013

------------------------------------------------------------------------------------------------ 

வணக்கம்!

முத்தான மூன்றுதிரைப் பாடல்கள்! இன்புற்றேன்
பித்தான ஏக்கம் பிடித்து!

05.01.2013

------------------------------------------------------------------------------------------------ 

வணக்கம்!

சீராளன் தந்த செழுந்தமிழைக் கண்ணுற்றேன்!
கூராளன் கொண்ட கவியாற்றல்! - பாராட்ட
எண்ணிப் படைத்தேன் இனிய தமிழ்வெண்பா!
நண்ணிப் படா்க நலம்!

05.01.2013

------------------------------------------------------------------------------------------------ 

வணக்கம்!

ஒப்பில் அழகியை ஓதிப் படைத்துள்ளாய்!
இப்புவி போற்றும் எழுந்து!

05.01.2013

------------------------------------------------------------------------------------------------ 

வணக்கம்!

தொடா்ந்து பதிவுகளைச் சூட்டித் தமிழில்
படா்ந்து வலையைப் பரப்பு!

05.01.2013

------------------------------------------------------------------------------------------------ 

வணக்கம்

சின்ன குழந்தை சிறந்து வளா்ந்திடச்
சொன்ன கருத்தோ சுவை!

05.01.2013

------------------------------------------------------------------------------------------------ 

வணக்கம்

நாச்சியார் தந்த நறுந்தமிழை உன்னுடைய
மூச்செனக் கொண்டாய் முனைந்து!

05.01.2013

------------------------------------------------------------------------------------------------ 

வணக்கம்!

இரண்டு வல்லின ஒற்றுகள் சோ்ந்து வாரா

தற்கொலை என்று எழுதவும்

இரண்டு வலியெற்[று] இணைவதே இல்லை!
திரண்ட தமிழின் தெளிவு!

06.01.2013

------------------------------------------------------------------------------------------------ 

வணக்கம்!

வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது
சொல்லி வைப்பாங்க - உன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க!

வேலையற்ற வீணா்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட
நம்பிவிடாதே! நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே!

பட்டுக் கோட்டை படைத்திட்ட
பாட்டுக்கு உரையைப் பகன்றுள்ளீா்!
கொட்டும் மழையில் நனைந்திட்ட
குளிர்ச்சி நெஞ்சுள் கூடியது!
கட்டுப் பாடும் கட்டளையும்
கருத்தைச் சிதைக்கக் கூடாது!
மொட்டு மனங்கள் முகிழ்த்தாட
மொழிந்த வழியை வாழ்த்துகிறேன்!

06.01.2013

------------------------------------------------------------------------------------------------ 

7 commentaires:

  1. வலைப்பூவில் தங்களின் கவிப் பூ மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
  2. அருமையான கவிப்பூ தொடரட்டும் ஐயா!

    RépondreSupprimer
  3. வணக்கம்
    ஐயா.
    கவிப்பூக்கள் அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  4. பின்னிய பாக்களைப் பேணிப் படைத்தீரே
    எண்ணிட இன்றும் உவகையே! - இன்னார்
    வலைப்பூவில் ஏற்றிய வாழ்த்திது என்றால்
    சிலையில் எழுத்தாய்ச் சிறப்பு!

    வலைப்பூ கண்ட கவிமனங்கள் மேலும் பரவட்டும் ஐயா!

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer
  5. வலைப்பூக்களில் குறள்களும் பாக்களுமாய்க் கொளிக்கிறது..!

    மிக அருமை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  6. தெள்ளிய பாக்கள் தெவிட்டாது என்றும்
    அள்ளித் தெளியும் அனைவரும் உவக்க
    உன்னிப்பாய் உற்று நோக்க உதிர்.

    அருமை தொடர வாழ்த்துக்கள்...!

    RépondreSupprimer