jeudi 5 décembre 2013

மங்கை! நிலவின் தங்கை!




மங்கை! நிலவின் தங்கை!

பூவையருள் நல்லழகுக் கண்ணே - நலம்
பூத்திருக்கும் நல்லிதயப் பெண்ணே!

சிங்கார நடைபயிலும் அன்னம் - நல்
செம்பவளம் போல்மின்னும் கன்னம்!
மங்காத தமிழைப்போல் இன்பம் - உன் 
வருகையினால் நீங்கிவிடும் துன்பம்!

சிரிப்பாலே மயக்கிவிடும் மங்கை - ஒளி
செறியும்வான் நிலவுக்குத் தங்கை!
விரித்தாயே காதல்வலை அன்று - பொன் 
விழிகள்தரும் பாட்டெல்லாம் நன்று!

பார்க்கின்ற பார்வைக்கேது ஈடு? - சிறு
பல்காட்டும் வெண்முல்லைக் காடு! 
வோ்க்கின்ற நெஞ்சத்தின் சூடு - தணிய 
விரைந்தே..நீ எனைவந்து கூடு! 

17.11.1990

13 commentaires:

  1. Réponses

    1. வணக்கம்!

      பெருமை அடைந்தேன் பெருங்கவி யாக
      அருமைத் தமிழை அளித்து!

      Supprimer
  2. ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      குவித்தேன் கவிமலா்! கொஞ்சும் தமிழைச்
      சுவை..தேன் எனநான் சுரந்து!

      Supprimer
  3. அருமையான கவிதை. ரசித்தேன்.

    த.ம. 3

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      சங்கத் தமிழ்மொழி எங்கும் பரவிட
      வெங்கட் தருவார் விருந்து!

      Supprimer
  4. நிலவதன் தங்கைக்கு நீரிசைத்த பாடல்
    உலவும் கவியுமது ஆற்றல் அழகிய
    பாட்டும் தருகிரதே பேராவல் கற்றிடவே
    காட்டும் கருணை கனிந்து!

    மிகவே ரசித்தேன் ஐயா!

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கருணை கமழும் கருத்தொளிர் வெண்பா
      அருமை! மிகஅருமை என்பேன்! - பெருமையுடன்
      தந்த எழுத்தெல்லாம் தங்க எழுத்தென்பேன்
      சந்தப் புலமை தரித்து!

      Supprimer
  5. Réponses

    1. வணக்கம்!

      அன்பின் பெருக்கில் அளித்த எழுத்துக்கள்
      என்னுள் இருக்கும் இனித்து!

      Supprimer

  6. மங்கை! குளிர்நிலவின் தங்கை எனும்கவிதை
    நுங்கை நிகா்த்த சுவைநுாற்கும்! - கங்கை
    பெருக்காய்க் கவிபாயும்! பேரின்பம் நல்கி
    இருக்கும் மனத்துள் இனித்து

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கங்கை பெருக்கெனக் கன்னல் கவிபடைக்க
      மங்கை விழிகள் மலா்ந்தனவோ! - சங்கெடுத்து
      ஊதுக ஓங்கு தமிழ்ச்செல்வா! என்கவியை
      ஒதுக நாளும் உவந்து

      Supprimer
  7. வணக்கம்
    ஐயா.

    மனதை நெருடிய கவிதை அருமை.. வாழ்த்துக்கள் ஐயா..

    எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன்... உங்களை அழைக்கிறது..http://tamilkkavitaikalcom.blogspot.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer