இரட்டை வெண்பா!
என்றும் இதயத்துள் மின்னும் இளையவளே!
குன்றும் சிதறுமுன் கூர்விழியால்! - இன்றென்னை
வாட்டி வதைக்குதடி வான்நிலவு! காமத்தீ
மூட்டிக் கொதிக்குதடி மூச்சு!
என்றும் அறமோங்கும்! ஈடில் தமிழ்மணக்கும்!
மன்னும் புகழொளி மாண்புடனே! - என்தோழா!
சங்கத் தமிழினத்தின் சால்புகளைத் தேனாறாய்ப்
பொங்கும் திருக்குறளைப் போற்று!
இரட்டை வெண்பா இலக்கணம்
இரண்டு வெண்பாக்களின் முதற்சீர் ஒரே சொல்லைப்
பெற்றிருக்க வேண்டும்
இரண்டு வெண்பாக்களின் ஈற்றுச்சீர்
(நாள், மலர், காசு, பிறப்பு) ஒரே வாய்ப்பாட்டுச் சீராக
அமைய வேண்டும்
இரண்டு வெண்பாக்களின் சீரும் தளையும்
ஒத்துவர வேண்டும்
முதல் வெண்பா அகப்பொருளைப் பற்றியும்,
இரண்டாம் வெண்பா புறப்பொருளைப் பற்றியும்
அமைய வேண்டும்!
13.12.2013
ஆஹா...இரட்டை வெண்பாவிலேயே உங்கள் விருப்பத்தையும் அழகாய் சொல்லிவிட்டீர்கள்
RépondreSupprimerசுவைத்து மகிழ்ந்தேன்
RépondreSupprimerஇரட்டை வெண்பா இலக்கணக் குறிப்பு கொடுத்தது
அனைவருக்கும் நிச்சயம் பயன்படும்
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வணக்கம்
RépondreSupprimerஐயா
மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
RépondreSupprimerஐயா
த.ம.4 வாக்கு.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை ஐயா. இரட்டை வெண்பாக்களின் இலக்கணம் அறிந்தேன். பயனுள்ள பதிவு.
RépondreSupprimerயாப்பிலக்கணத்தை எளிமையாக கற்கும் வண்ணம் ஒரு தொடர் பதிவை எழுதினால் எங்களைப் போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். முன்பு அப்படி எழுதப் போவதாக தாங்கள் சொல்லியதாக நினைவு. எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
விளக்கம் மிகவும் அருமை ஐயா... நன்றி...
RépondreSupprimerவாழ்த்துக்கள்...
இரட்டையாய் வெண்பா இலக்கணமுந் தந்தீர்
RépondreSupprimerதிரட்டிச் சிறக்குதே சீர்கள்! - மிரட்டும்
பயிற்சியாய் இல்லையே பாவெழுத உள்ளம்
உயற்சியே காணும் உவந்து!
வணக்கம் ஐயா!
அருமையான இரட்டை வெண்பாக்கள் தந்தீர்கள்!
அதனோடு அதன் இலக்கணம் மிகத் தெளிவாக, இலகுவாக
எமக்குப் புரியும் வகையாய்த் தந்துள்ளமையும் மிக்க மகிழ்வாயிருக்கின்றது.
இதனையே பயிற்சியாய் கொள்ளவும் விரும்பமாயுள்ளது.
ஐயா!... இப்படியே தொடர்ந்து எமக்கு இலக்கணப் பயிற்சியைத் தரவேண்டுகிறேன்!
மிக்க மகிழ்ச்சி ஐயா!
என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!
அகப்பொருள் புறப்பொருள் வெண்பாக்கள் மிக அருமை!
RépondreSupprimerஅத்தோடு இலக்கணமும் கூறியுள்ளீர்கள்.
கற்றிட ஆர்வமுள்ளவர்க்கு இனிப்பானதே!.
வாழ்த்துக்கள் கவிஞரே!
வணக்கம் !
RépondreSupprimerகம்பனைப் போற்றும் மனத்தாலே
கவி பல தந்து மகிழ்பவனே
உன்றனை வாழ்த்தி வணகுகின்றேன்
உணர்வினைத் தொட்ட நற் கருத்தாலே !
''..நாள், மலர், காசு, பிறப்பு) ஒரே வாய்ப்பாட்டுச் சீராக ..''
RépondreSupprimerஇது தலை சுத்துது
வேதா. இலங்காதிலகம்..
அந்தமும் சந்தமும் அறியேனே
RépondreSupprimerஅதில் வரும் பந்தமும் புரியேனே
அதை அறிந்திடும் ஆர்வம் உள்ளேனே.
என்னை போல படிக்காத பாமரர்க்கும் போய் சேரவேண்டாமா புரிந்தது போலவும் புரியாதது போலவும் இருக்கிறது.
ஒரு சிறிய அளவில் கருத்தை குறித்தல் சிறந்தது என்று எண்ணுகிறேன்.தயவுடன் மன்னியுங்கள் தவறென்றால்.
நல்ல முயற்சி!தொடரட்டும் தங்கள் பணி! வாழும் தமிழ், மேலும் வளரும் தங்களால்!
RépondreSupprimerவிளக்கம் அருமை ஐயா!
RépondreSupprimer