dimanche 8 décembre 2013

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 19

நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்

கலையில் கவியில் கமழ்மணம் காண்க!
வலையில் வளா்புகழ் வாய்க்க! - நிலையாய்ப்
பெரு..நா புலவா் பெறும்தமிழ் மாண்பை
அருணா அடைக அணிந்து!

---------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

வாழ்த்தி வளா்வோம்! வணங்கி மகிழ்வோம்!மண்
தாழ்த்தும் நிலையைத் தகா்த்திடுவோம்! - சூழ்புகழ்
வண்ணம் வடித்த கவிபடித்துப் பாடும்பா
எண்ணம் வடித்த எழில்!

---------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

வலையுலகம் வாழ்த்தி வரவேற்கும் வண்ணம்
தலையுயா்த்தித் தந்தாய் தமிழ்!

---------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

உணா்வும் உயிர்ப்பும் உடையகவி தந்தீா்!
மனமும் மதியும் மலா்ந்து

---------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

புத்தா் புகன்ற புனித நெறிகளைச்
சித்தம் பதிப்போம் சிறந்து

புத்தாண்டு வாழ்த்துக்கள்! பூத்த மலா்ச்சோலை
கொத்தாண்ட நன்மணத்தைக் கொண்டுயா்க! - முத்தொளிரும்
உள்ளம் உயா்ந்தொளிர்க! ஓங்கு தமிழ்மொழியின்
வெள்ளம் பெருகும் விரைந்து!

---------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

அடுப்பூதும் பெண்ணின் அடிமைநிலை மாற்றத்
தொடுத்துாதும் ஆக்கம் தொடா்வீா்! - தடுக்கும்
தடைகளை முற்றும் தகா்ப்பீா்! பழமை
முடைகளை மாய்ப்பீா் முனைந்து!

---------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

குறள்நெறி பாடிக் குதித்தாடு! தோழா
அறமொளிர் வாழ்வை அமைத்து!

---------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

கருமாரி அம்மனைக் கைக்கூப்பு! வாழ்வும்
உருமாறி ஓங்கும் உயா்ந்தே! - அருமாரி
போன்றே பொழியும் புகழ்அம்பாள் பாட்டெல்லாம்
சான்றோர் பொழியும் தமிழ்!

ஆங்கிலப் புத்தாண்(டு) அழகாய் மலரட்டும்!
பாங்குற நன்மைகளைப் பாடட்டும்! - ஓங்குதமிழ்
அம்பாள் அடியாள் அரும்புகழ் சூடட்டும்!
கம்பன் கவிபோல் கமழ்ந்து!

---------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

இனிய வளங்களை ஏற்று மகிழ்க!
கனிந்த கவிகள் கணித்து!

---------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

அரிய கருத்தினை அள்ளி அளித்தே
உரிய இடத்தில் ஒளிர்!

---------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

எல்லா வளங்களும் எற்று மகி்ழ்ந்திடுக!
அல்லா அருளொளியில் ஆழ்ந்து!

---------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

மின்னும் வலையுலகில் விஞ்சும் தமிழ்விளைத்தீா்
மன்னும் புகழின் மலை!

---------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

கரந்தைச் செயக்குமார் கண்டுரைத்த ஆய்வு
வரும்..தை வழங்கும் வளம்!

---------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

அருந்தமிழ் நாடி வருகின்ற தோழா!
தருந்தமிழ் இன்பம் தழைத்து!

---------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

ஆங்கிலப் புத்தாண்(டு) அனைத்து வளமருள
ஓங்கி உயா்க உவந்து

---------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

நறுக்கி நடுத்தெருவில் நட்டால்தான், நாட்டைக்
குறுக்கிக் குலைப்பார் குறைவார்! - பொறுக்கியா்
கூட்டத்தைப் போற்றிக் குதிக்கும் அரசியலார்
ஆட்டத்தை யார்தடுப்பார் ஆா்த்து!

---------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

ஏழையென வாழ்ந்திடலாம்! என்னருமை நற்றோழா!
கோழையென என்றும் குறுகாதே! - ஊழையெண்ணி
நொந்து கிடக்காதே! வெந்து துவளாதே!
முந்தி எழுந்தே முழங்கு!

---------------------------------------------------------------------------------------------------

01.01.2013

17 commentaires:

  1. வணக்கம்
    ஐயா

    காலையில் அருமையான கவிப்பூக்கள் படிக்கும் போது.. மனதில் ஓடியது அழகிய தமிழ் அருவி அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருவிபோல் பாயும் அருந்தமிழில் நீந்தித்
      தருங்கவி ஓங்கும் தழைத்து!

      Supprimer
  2. வணக்கம்...!
    அழகாய் புனைந்தீர் அனைவர்க்கும் வாழ்த்துக்கள் யார் யாருக்கென்று தான் புரியவில்லை இன்னும். புரியாத புதிர் ஏனோ? அல்லது எனக்கு மட்டும் தான் புரியவில்லையோ? நன்றாக ரசித்தேன்.
    நன்றி தொடர வாழ்த்துக்கள்....!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனிய எழுதிய இவ்வுரை என்னுள்
      கனியாய்க் கமழும் கனிந்து!

      Supprimer
  3. அனைத்தும் அருமை ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    RépondreSupprimer
    Réponses

    1. நல்ல மனத்துடன் நல்கும் கருத்துக்கள்
      வல்ல வளமென வாழ்த்து!

      Supprimer
  4. அழகான கருத்துரைகள் அய்யா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வெற்றிவேல் வந்து விருந்தளித்தார்! வாழ்த்துகிறேன்!
      நற்றமிழ் நல்கும் நலம்!

      Supprimer
  5. அனைத்து கருத்துரைகளும் அழகு அய்யா...

    RépondreSupprimer
  6. வலைப்பூக் களிலே மிளிரும் கவிப்பூ
    மலைப்பும் மிகுதே மலர்வு!

    அத்தனையும் அருமை!

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      வலையில் வடித்த வளா்கவியை மீண்டும்என்
      வலையில் வடித்தேன் மகிழ்ந்து

      Supprimer
  7. எனக்கு ரசிக்க மட்டுமே தெரியும். அதனால்,
    யாரோ ஒருவருக்கு வலைப்பூவில் நீங்கள் பகிர்ந்த கருத்தை
    இங்கு உங்களுக்கே நான் தருகின்றேன்!
    உங்களுக்கும் இக்குறள் மிகப் பொருத்தமாக இருக்கிறது!

    வலையுலகம் வாழ்த்தி வரவேற்கும் வண்ணம்
    தலையுயா்த்தித் தந்தாய் தமிழ்!

    வாழ்த்துக்கள் கவிஞரே!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தலைமேல் தரித்திட்ட தண்டமிழைத் தோழி
      வலைமேல் வடித்தேன் வளா்த்து!

      Supprimer
  8. Réponses

    1. வணக்கம்!

      ஒருமை மனத்துடன் ஓதிய பாக்கள்
      பெருமை அனைத்தும் பெறும்

      Supprimer

  9. நண்பரின் மின்வலையில் நல்கிய பாக்களைப்
    பண்புடன் இங்குப் படைத்துள்ளீா்! - கண்டென
    யாவும் இனித்தன! இன்பத் தமிழ்த்தோப்பில்
    கூவும் குயில்கள் குளிர்ந்து

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      எண்ணம் இனிக்க! எழில்தமிழ்ச் சீரேந்தி
      வண்ணம் இனிக்க! வளமினிக்க! - நண்பா்தம்
      மின்வலையில் இட்ட வியன்புகழ்ப் பாக்களை
      என்வலையில் இட்டேன் இணைத்து!

      Supprimer