தாய்மண்ணே வணக்கம்
எடுப்பு
புதுவை மண்ணே வணக்கம் - தமிழ்ப்
புலமை உன்பால் மணக்கும்!
(புதுவை)
தொடுப்பு
மதுவைப் போன்றே மயக்கும் - உன்
மடியில் பிறக்கும் தமிழின் இயக்கம்!
(புதுவை)
முடிப்பு
பாரதி பாடிய பைந்தமிழ்த் தோட்டம் - சந்தப்
பண்மலர் சூடிய பாவலர் கூட்டம்!
பாரதி தாசனின் படையொளிர் கோட்டம் - எப்
பக்கமும் பாட்டுடன் பார்க்கலாம் ஆட்டம்!
(புதுவை)
இலக்கண இலக்கியம் பூத்திடும் காடு - என்றும்
இணையிலாச் செந்தமிழ் வாழ்ந்திடும் வீடு!
கலைமணம் கமழ்ந்திடும் காவிய ஏடு! - ஈடில்
கவிமணம் பரவிடும் குறள்மணத் தோடு!
(புதுவை)
சீருடைக் கம்பனைச் செப்பும்நற் புதுவை
- தமிழ்க்
கூருடைப் புலவர்கள் குவிந்திடும் புதுவை!
பேருடைச் செயல்களால் பீடுறும் புதுவை
- தமிழ்
வேருடைப் புகழ்தனில் மேலுறும் புதுவை!
(புதுவை)
12.05.2012
வணக்கம்
RépondreSupprimerஐயா
காலைப்பொழுதில் மனதுக்கு விருந்தாக அழகிய கவிதை அருமை வாழ்த்துக்கள் ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
RépondreSupprimerஐயா.
த.ம 5வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
புதுவையின் புதுமை
RépondreSupprimerபோற்றிடும் எண்ணம்
பூத்திடும் இலக்கணம்
பொருந்திடல் பெருமையே
நன்றி தொடர வாழ்த்துக்கள்...!
வணக்கம் !
RépondreSupprimerபுதுவையின் அழகினைப்
பொலிவினைப் போற்றிடும்
கவிஞனின் உள்ளம்
வாழிய வாழிய வாழியவே ....
அழகிய கவிதை நன்றி
RépondreSupprimerத.ம.9
சிறந்த பாவண்ணம்
RépondreSupprimerமிக அருமை ஐயா...!
RépondreSupprimerத.ம. +1