மயிலேறி வருவான்
எடுப்பு
அழகிய மயிலேறி வருவான் - நல்
ஆற்றலை நமக்கென்றும் தருவான்... முருகன்
(அழகிய)
தொடுப்பு
பழமுதிர் சோலையிலே திரிவான் - அவனைப்
பாடினால் நல்லருளே புரிவான்... முருகன்
(அழகிய)
முடிப்பு
திருப்பரங் குன்றமும் அவன்வீடு
திருச்செந்தூர் சீரொளிர் பாக்காடு!
திருத்தணி புகழினைத் தினம்பாடு!
திருவாவி னன்குடி தனைநாடு... முருகன்
(அழகிய)
திருவேட்கா(டு) அதனிலே தினமிருப்பான்
தெய்வானை வள்ளியொ(டு) அவன்களிப்பான்
குருவாக நின்றருள் நமக்களிப்பான்
குன்றாத செந்தமிழ் இசைகொடுப்பான்... முருகன்
(அழகிய)
17.06.1985
அழகு... அருமை... அனைத்தும் சிறப்பு ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
பதிவைப் படைத்ததும் பற்றிப் படிக்கும்
மதியை உணா்ந்தேன் மகிழ்ந்து!
அழகு
RépondreSupprimer
Supprimerஅழகனைப் பாடும் அகத்துள் இனிமை
ஒழுகும் அமுதாய் உருண்டு!
முருகன் மேல் பாடிய தங்கள து பாடல் மிக்க சிறப்புடைத்து.
RépondreSupprimerஅதை நான் பிருந்தாவன சாரங்க எனும் ராகத்தில் பாடி பார்த்தேன்.
மிகவும் அழகாக வருகிறது.
அந்த முருகனே அருள். புரிந்த மாதிரி தோன்றுகிறது.
நன்றி பல.
பாட்டை பதிவேற்றி நாளை ( இப்போது இங்கு இரவு 11 மணி ) யூ ட்யுபில் போட்டு உங்களுக்கு அனுப்புகிறேன்.
சுப்பு தாத்தா.
பாடல் இடம் பெறும் இடம் ( உங்கள் அனுமதியுடன்)
Supprimerவணக்கம்!
தங்கள் விருப்பம்! அரும்சுப்புத் தாத்தாவே
பொங்கும் இசையைப் பொழிந்திடுவீா்! - எங்கன்
மனம்மகிழ்ந்து உண்டு மகிழ்வோம்! கவியின்
இனமறிந்து செய்வீா் இசை!
தமிழ்க் கடவுளின் பாட்டு அருமை.மெட்டிட்டால் இன்னும் சிறப்பாய் இருக்கும்
RépondreSupprimer
Supprimerவணக்கம்
சுப்பவா்கள் சூடுகிறார் நல்லிசை! கேட்டுவந்தால்
உப்பிடும் நம்மின் உளம்!
அழகான பாடல் .பாராட்டுககள் பகிர்வுக்கு ..!
RépondreSupprimer
Supprimerஅழகன் திருவடியில் ஆழ்பட்டேன் தந்தேன்
உழவன் இசைபோல் உவந்து!
இன்பம் மிகவாம் தமிழ்மொழிப் பாக்களாம்
RépondreSupprimerஅன்பன் முருகன் அருள்!
Supprimerவணக்கம்!
இன்ப முருகனிடம் ஏங்கும் மனத்துள்ளே
அன்பு சுரக்கும் அறி!
முருகனைப்பற்றிய அற்புதமான வரிகள்...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
முருகனைப் பற்றி மொழிந்த கவியுள்
உருகும் உயிர்கள் உருண்டு!
வணக்கம்
RépondreSupprimerகவிஞர் ஐயா
முருகப்பெருமானைப் பற்றிய பதிவு மிக அருமையாக உள்ளது அழகனின் அழகு அழகுதான் வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
Supprimerவணக்கம்!
அழகன் முருகனிடம் ஆசை பெருகிப்
பழகும் கவிகள் பழம்!
குன்றாத செந்தமிழ் தங்கள் அருளால் வாசித்து மகிழ்கிறோம்.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
குன்றாளும் வேலவனைக் கொஞ்சும் கவிதைகள்
வென்றாளும் பாரில் விரிந்து!
மலேசிய மலை முருகனை நேரில் கண்டேன்!
RépondreSupprimerஅன்பரே! அருள் கூர்ந்து இன்றைய என் பதிவைப் படித்து மறுமொழி தர வேண்டுகிறேன்!
Supprimerவணக்கம்!
மலையாளும் வேலவனை வந்தாட வேண்டி
கலையாளும் என்றன் கவி!
அழகன் முருகனுக்கு அருமையான பாடல்...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
ஆடும் மயிலமா்ந்த ஆறுமுகன் நல்லடியைப்
பாடும் மனமே பணிந்து!
ஐயா வணக்கம்!
RépondreSupprimerஎன் மனம் நிறைந்த அழகன் முருகன்மேல் இசைத்த பாட்டு!
உளம் நிறைந்து உவகை தருகிறது!
வாழ்த்துக்கள்!
Supprimerவணக்கம்
வள்ளி தலைவனை வாழ்த்திய வண்டமிழை
அள்ளிச் சுவைப்பீா் அழகு!
RépondreSupprimerவண்ண மயிலேறி வந்தாட வேண்டுமென
எண்ணம் இனித்த தமிழிசை! - உண்டுவந்து
உள்ளம் உருகும்! உயா்ந்தோங்கி ஒண்டமிழ்
வெள்ளம் பெருகும் விரைந்து!
Supprimerவணக்கம்!
நீல மயிலாடும்! நெஞ்சம் நிறைந்தாடும்!
கோல வளங்கள் கொழித்தாடும்! - காலமெலாம்
பன்னிரு கையோனைப் பற்றிக் கிடமனமே!
உன்னிரு கண்கள் உகுத்து!
இங்கே தங்களது பாடலின் இசையைக் கேட்டு முருகன் அருள் பெறுங்கள்.
RépondreSupprimersubbu thatha
www.kandhanaithuthi.blogspot.com
Supprimerவணக்கம்!
என்றும் இனிக்க இசைமழை தந்துவந்தீா்!
நன்றி நவில்கின்றேன் நான்!
RépondreSupprimerவணக்கம்!
புள்ளி மயிலாடும் பூஞ்சோலைப் புண்ணியனை
வள்ளி மனம்வாழும் வல்லவனை! - வெள்ளிமலை
ஈசனின் செல்வனை என்றும் புகழ்ந்தேத்திப்
பேசு..நீ! இல்லை பிறப்பு!