vendredi 26 juillet 2013

சுப்புத் தாத்தா

 இசைவாணா் சுப்புத் தாத்தாவின் குரலிசை



பாவாணன் பாரதி தாசன் தமிழ்க்கவிக்கு 
நாவாணா் நற்சுப்புத் தாத்தாவின் - மா..வானப்
பண்மழை! இன்பப் படா்மழை! இன்னிசையால்
கண்மழை மேவும் கனிந்து!



15 commentaires:

  1. //கண்மழை மேவும் கனிந்து!//

    என் கண்களிலிருந்து மழைத் துளிகள் பெய்ய
    இதயம் நனைந்தது.

    எல்லாம் அந்த முருகன் அருள்.

    நீவிர் பாரதிதாசன் அல்ல
    பார் அதி வள்ளல் ஆகிவிட்டீர்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பார்அதில் வள்ளல் எனப்பகன்றீா்! பாட்டெழுதும்
      சீா்அதில் நான்வள்ளல்! சிந்தனையாம் - கூா்ஒளிரும்
      ஆக்கம் அனைத்தும் அகில இருள்கிழித்துப்
      போக்கும் துயரைப் புதைத்து!

      Supprimer
  2. ஐயா வணக்கம்!...

    எங்கள் மனங்கவர் இசைவாணர் சுப்புத்தாத்தா தங்களின் பா இதனை
    மிகமிக அற்புதமாகப் பாடித் தந்துள்ளார்.

    சுப்புத்தாத்தா!..

    தங்களின் பாட்டுக்கு தந்த குரலிசை
    பொங்கும் மனத்துள் புகுந்து!

    பாவும் இசையும் சேர்ந்து மனதை உருக்கிவிட்டதையா.
    மிகவே ரசித்தேன். அருமை!

    சுப்புத்தாத்தாவுக்கு என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!

    இங்கு எமக்கும் இதைக் கேட்கப் பகிர்ந்தமைக்கு உங்களும் என் அன்பான நன்றி!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இசைத்தமிழ் நல்கும் இளமதி! உன்றன்
      விசைத்தமிழ் பரவும் விரைந்து!

      Supprimer

  3. இசைவாணா் இன்சுப்புத் தாத்தை குரலில்
    அசையாதார் யாரோ? அமுதைப் - பிசைந்தளித்தார்!
    பல்லாண்டு பல்லாண்டு பல்கோடி ஆண்டுகள்
    சொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அமுதை அளிக்கும் அருங்கருத்துச் செல்வா!
      தமிழை உயிரெனத் தாங்கு!

      Supprimer
  4. வணக்கம
    ஐயா
    பாடல் மிக அருமை உள்ளம் கசியவைத்தது வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    RépondreSupprimer
    Réponses

    1. இசைக்கிடம் தந்த இதயத்தில் என்றும்
      பசிக்கிடம் இல்லை பகா்!

      Supprimer
  5. பாட்டும் இசையும் அருமை. சுப்பு தாத்தா அவர்களுக்கு வணக்கங்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இன்சுப்புத் தாத்தா இசையால் மழைபொழியும்
      பொன்சுப்பு தாத்தா புகழ்!

      Supprimer
  6. சுப்புத் தாத்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    அவரை சிறப்பித்தமைக்கு நன்றி ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கற்றவரைப் போற்றல் கடமை! செழுந்தமிழ்
      உற்றவரைப் போற்றல் உயா்வு!

      Supprimer
  7. ஐயா வணக்கம்!

    மேலும் சிறப்பாக இருக்கிறது உங்கள் பா இப்போது இன்னும்!

    சுப்புத்தாத்தா அற்புதமாக பாடியிருக்கிறார் ஐயா!
    அவர் குரலில் பக்தி இழைந்து எம்மையும் பாட வைக்கிறது. மிக மிக நன்றாக இருக்கிறது.

    தாத்தாவுக்கும் உங்களுக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்!!!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பூங்கொடி தந்த புகழுரையை நான்கண்டு
      தேங்கனி என்பேன் தெளிந்து!

      Supprimer

  8. வணக்கம்!

    என்மன நன்றியை இங்கு விரிக்கின்றேன்!
    பொன்மனம் கொண்டேன் புகழ்ந்து!

    RépondreSupprimer