காதல் ஆயிரம் [பகுதி - 106]
911.
கட்டி அனைத்துக் கவிபடித்து! முத்தத்தைக்
கொட்டிக் கொடுத்துக் குளித்திட்டாய்! - தொட்டவிடம்
ஆகுதே பொன்னாய்! அதைக்கண்டு நற்பயணம்
போகுதே சோடிப் புறா!
912.
தேனூறும் தீங்கனியோ? தென்றலோ? தேவதையோ?
வானூரும் வெண்மதியோ? வண்டமிழோ? - நானூறத்
தந்தாடும் கண்ணழகைத் தான்கண்டு, காதலிலே
வந்தாடும் வண்ண மயில்!
913.
சோலை மலரழகில் சொக்கும் சிறுவண்டாய்
மாலை மயக்கம் மணம்பரப்பும்! - சேலையெழில்
தாவுதே நெஞ்சம்! தமிழ்க்கவியின் சொற்கேட்டுக்
கூவுதே சின்ன குயில்!
914.
கோவைக் கனியோ? குளிர்ந்த,செந் தாமரையோ?
பாவை படைத்த பவளவிதழ்! - சேவையெனும்
ஊற்றாடும் உள்ளழகைத் தான்கண்(டு) உயர்தென்னைக்
கீற்றாடும் பச்சைக் கிளி!
915.
அங்கே இருந்தெனைக் கொல்லும் அருங்கலையை
எங்கே இருந்து..நீ கற்றாயோ? - தங்கமே!
வேர்வையில் நின்றாலும் வேல்விழியே உன்காந்தப்
பார்வையில் கண்டேன் பருந்து!
(தொடரும்)
ஊற்றாடும் உள்ளழகைத் தான்கண்(டு) உயர்தென்னைக்
RépondreSupprimerகீற்றாடும் பச்சைக் கிளி!//என்ன சொல்வது எப்படி சொல்வது
பறவைகளோடு நானும் சந்தோசத்தில் பறந்தேன்... வாழ்த்துக்கள் ஐயா...
RépondreSupprimerவழக்கம் போல அழகாக படைத்துள்ளீர்கள்...
RépondreSupprimerகிளிபுறா மயிலொடு குயிலினைக் கூறியே
RépondreSupprimerவிழிமலர் விரிந்தது நன்றே கூடவே
கூறினீர் கொன்றிடும் கூரிய பருந்தினை
ஊறிய உணர்வும் உதிரமும் உறைய!
த ம.3
சோலை மலரழகில் சொக்கும் சிறுவண்டாய்
RépondreSupprimerமாலை மயக்கம் மணம்பரப்பும்! - சேலையெழில்
தாவுதே நெஞ்சம்! தமிழ்க்கவியின் சொற்கேட்டுக்
கூவுதே சின்ன குயில்!
----------------------
அழகான நடை... அருமையான கவிதை...
RépondreSupprimerமயிலாட! பச்சைக் கிளியாட! சின்ன
குயில்பாட! நற்புறா கொஞ்ச! - உயரப்
பறக்கும் பருந்தும் வருகைதர! உன்பா
சிறக்கும் இனிமை செழித்து