வளம் பெறுக
பெரியவர் சொல்லை என்றும்
பேணியே மதித்தல் வாழ்வு!
சிறியவர் இவரே என்று
சிரித்திடின் பெறுவோம் தாழ்வு!
வறியவர் நிலையைக் கண்டு
மாண்புடன் உதவி புரிக!
கொடியவர் செயலைக் கண்டு
கொன்றிடும் புலியாய் எழுக!
நல்லவர் நட்பை நாடி
நலம்பல பெறுக இன்றே!
வல்லவர் அன்பைத் தேடி
வளம்பல பெறுக நன்றே!
07.04.1980
நல்லவர் நட்பை நாடி
RépondreSupprimerநலம்பல பெறுக இன்றே!
வல்லவர் அன்பைத் தேடி
வளம்பல பெறுக நன்றே!
நன்றே நவின்ற பாவுக்கு நன்றி ..!
அருமையான கருத்துக்கள் அடங்கிய வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...
RépondreSupprimerஉண்மையை எல்லோரும் உணர வேண்டும் வளர வேண்டும்
RépondreSupprimerநல்லவர் நட்பையே நாடுவோம்
RépondreSupprimerநலம் பெற பெறுவோம்
நன்றி அய்யா
நலம்பல எண்ணம் கொண்டே
RépondreSupprimerநாடியே நன்மை செய்தால்
உளமதில் உவகை பொங்கும்
உணர்ந்திட உரைத்த வஞ்சி!
ஐயா வணக்கம்!
இன்று நல்லதொரு வஞ்சி விருத்தம் தந்து இன்னுமொரு படிமுறையிதுவெனக் காண்பித்துள்ளீர்கள்!
மிகமிக அருமை!
நானும் எழுதியதை இங்கு பதிந்துள்ளேன். தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள். திருந்(த்)துவதற்கு ஏதுவாக இருக்கும்...:).
மிக்க நன்றி ஐயா!
அன்பான வாழ்த்துக்கள்!
மிகமிக உயர்ந்த அவசியமான சிறந்த கருத்துகள் கொண்ட கவிதை!
RépondreSupprimerஅருமை!
வாழ்த்துக்கள் ஐயா!
அருமையான கவி வரிகள்...
RépondreSupprimerவணக்கம் கவிஞர்.
RépondreSupprimerஉங்களைத் தொடர் பதிவிட அழைப்பு விடுத்துள்ளேன். என் அழைப்பைத் தயவுகூர்ந்து ஏற்று பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.