dimanche 10 février 2013

இசைப் பாடலா? இசை பாடலா?

தமிழிசைப் பாடல்கள் என ப்- ஒற்றுச் சேர்ந்து வருவதே சரியாக இருக்கும்! ஹும்ம்ம்ம்ம்ம்ம்

-------------------------------------------------------------------------------------------------------------

ஐயா வணக்கம்!

நீங்கள் யார் என்பதைத் தெரிவித்தே பிழைகளைச் சுட்டிக் காட்டலாம்!

இசைப்பாடல்
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
வல்லினம் மிகும்!

இசைபாடல்
வினைத்தொகை
இவ்விடத்தில் வல்லினம் மிகாது

ஆழமாக இலக்கண அறிவு பெற்றோர் இதுபோன்று இரண்டு விதிகள் பொருந்துகின்ற இடங்களில் வினைத்தொகையை எற்பா்.

வினைத்தொகையிலும், எழுவாய்த் தொடரிலும் எவ்விடத்தும் வல்லினம் மிகுக்காமல் எழுதுவதே சிறப்பு!

புகழ்த் தமிழ்
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
வல்லினம் மிகும்!

புகழ் தமிழ்
வினைத்தொகை வல்லினம் மிகாது

சாற்று கவி
சாற்று என்பது வன்தொடா்க் குற்றிலுகரம்
வன்தொடா்க் குற்றயலுகரத்தில் வல்லினம் மிகும்

வன்தொடா் குற்றியலுகரமாக இருந்து வினைத்தொகையாக இருப்பின்
வலி மிகாது


கொக்குத் தோப்பு
வன்தொடா் குற்றிலுகரம் வலி மிகும்

கொக்கு பறக்கும்
எழுவாய்த் தொடா் வலி மிகாது

1 commentaire:

  1. வணக்கம்
    கவிஞர்,கி,பாரதிதாசன்(ஐயா)

    அருமையான இலக்கணவிளக்கம் வேற்றுமைகள் குற்றியலுகரம் வினைத்தொகை
    எழுவாய் பற்றிய விளக்கம் அருமை ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer