தமிழ் உறவுகளே வணக்கம்!
நீங்கள் எழுதும் கருத்து
மழையில் என்னுள்ளம் கரைந்து மகிழ்கிறது!
உங்கள் வரவை எண்ணியே
புதிய கவிதைகளை
எழுதவேண்டும் என மனம் எழுகிறது, இரண்டு
மூன்று ஆண்டுகளாக
ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகளை எழுதி இருந்தும்
கணினியில் பதிவு
செய்யக் காலமின்றிப்
பேழையில் குவிந்துள்ளன, ஒவ்வொன்றாக வலையில் பதிவேற்றுவேன், மெல்ல வலைப்பதிவைக்
கற்று வருகிறேன்!
கம்பன் கழகத்தின் தொலைக்காட்சி
இயக்குநரும், குறளரங்க மின்வலைப் பொறுப்பாளரும், கம்பன்
இதழ் வடிவமைப்பாளரும்
நண்பா் சிவகுமார்
நேற்று மாலை
என் இல்லத்திற்கு
வருகைதந்து மின்வலை இயக்கும் நுட்பங்களைக் கற்றுக்கொடுத்தார்!
என் வலையின்
பெயரை அழகி
வண்ணத்தில் மாற்றி அமைத்தார்! ஒலி ஒளி
காட்சி அமைத்தார்!
அவரின் தமிழ்
உள்ளம் செழித்துச்
சிறக்க வாழ்த்துகிறேன்!
நன்றி நவில்கின்றேன்!
நண்பா் சிவகுமார் நாளும் தமிழமுதை
உண்பா்! கணிப்பொறி நுண்கையா்! - ஒண்மனத்தா்!
எல்லாத் திசையும் எழிற்றமிழ் பூத்தாட
நில்லா துழைப்பார் நிலத்து!
அய்யா தங்களின் வலைப் பூ புதிய பொலிவினைப் பெற்றிருக்கின்றது. தங்களது நண்பர் சிவக்குமாரின் பணி போற்றத் தக்கது.
RépondreSupprimerஒலி, ஒளி காட்சி கண்டேன்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு- நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு
என்பதை தங்களின் இனிமையான கவிதை வரிகளில்
கண்டு கேட்டு மகிழ்ந்தேன். நன்றி
Supprimerவணக்கமும் நன்றியும்
ஒற்றுமை தன்னை உயிரெனக் காத்திடுவோம்
நற்றுணை ஆகுமே நட்பு!
நண்பர் சிவகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றி...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
நட்பின் சிறப்பெண்ணி நன்றி நவின்றது
கற்பின் சிறப்பாம் கருது
தோள்கொடுப்பான் தோழன் என்பதற்கு சிறந்த உதாரணம்
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
வலையில் கிடைத்த வளா்தமிழ்த் தோழி
கலையாய்க் கொடுத்தாய் கருத்து
தோள்கொடுப்பான் தோழனெனச் சொன்ன சொற்கள்
பால்கொடுக்கும் இனிமையினைத் தந்த தென்பேன்!
நாள்கொடுப்பான்! நலங்கொடுப்பான்! நல்ல நண்பன்
நற்படைக்கு நிகரான வலிமை என்பேன்!
மால்கொடுப்பான் என்றுரைத்த குசேலன் போன்று
மனமுழுதும் அன்பிருந்தால் மணக்கும் நட்பே!
தேள்கொடுக்காய் இருக்கின்ற நபரும் உள்ளார்
தோ்ந்தெடுப்பில் மிகத்தெளிவு வேண்டும்! வேண்டும்!
உங்கள் கவிதையே தனி அழகு.....
RépondreSupprimerடெம்ப்ளேட் சூப்பரா இருக்குது சார்
Supprimerசிட்டுக் குருவியே! செந்தமிழில் பாடிக்..கை
தட்டும் குருவியே! சால்பு!
சார்என்று சொல்லுவதேன்? ஐயா எங்கே?
சந்தோசம் கொள்ளுவதேன்? மகிழ்ச்சி ஆக்கு!
கார்என்று பேசுவதேன்? மகிழ்வுந்(து) ஆகும்!
கரைட்டென்று காட்டுவதேன்? சரியாய் மாற்று!
போர்என்று செல்லுவதேன்? கடுப்பே எண்ணு!
புதன்என்று கூறுவதேன்? அறிவன் அன்றோ!
ஓா்என்று எழுதுவதும் உயிரின் முன்னே!
ஒப்பில்லாத் தமிழ்பாடிப் பறப்பாய்ச் சிட்டே!
சிவகுமார் அவர்களுக்கு நன்றிகள்.
RépondreSupprimerவணக்கம் ஐயா எமக்கு எப் பொங்கல் சிறந்ததென்று
RépondreSupprimerமிக இனிமையாக எடுத்துரைத்துள்ளீர்கள் அருமையான
கவி வல்லமை கொண்டு .வாழ்த்துக்கள் தங்கள் பணி
மென்மேலும் ஓங்கட்டும் !....மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
Supprimerவணங்கிப் போற்றுகிறேன்!
அம்பாள் வருகை! அடியவனின் பாட்டுள்ளம்
கும்மாளம் போடும் குதித்து!
அவரது உழைப்பு அருமையாக வெளிப்பட்டுள்ளது அய்யா!!! புதுப் பொலிவோடு அழகாக உள்ளது...
RépondreSupprimerஅவருக்கும், தங்களுக்கும் வாழ்த்துகள்...
Supprimerவணக்கம்!
இரவின்பொற் புன்னகை! இன்பச் சுரப்பு!
திருவின் செழிப்பாம் திரட்டு!
RépondreSupprimerஅன்பு வணக்கம்!
பன்மணம் கமழும் சோலை
பாடிடும் குயில்கள் போன்றே
என்மனக் கவிதைச் சீரை
எழுதிய உரைகள் என்பேன்!
பொன்மனத் தோழ தோழா்
புலவன்என் நன்றி ஏற்பீா்!
இன்மனத் தோடே நாளை
இடுகையைக் காண வாரீர்!
RépondreSupprimerநண்பரை எண்ணி நவின்ற பதிவினைப்
பண்புடன் பற்றிப் படித்துவந்தேன்! - விண்மழைபோல்
அன்பு மழைகண்டேன்! ஆரமுதாய் அந்தமிழின்
இன்பம் வரக்கண்டேன் இன்று!