dimanche 28 octobre 2012

முல்லைக் காடே!





முல்லைக் காடே

பூந்தமிழ்ப் புகழைப் பாடு - அதற்குப்
புவியினில் ஏதிங்(கு) ஈடு!
பைந்தமிழ்த் தேனைப் பருகு - சந்தப்
பாவினில் உள்ளம் உருகு!

வண்டமிழ் வண்ணப் பாக்கள் - மனம்
மயக்கிடும் வைரப் பூக்கள்!
ஒண்டமிழ் அழகே அழகு - உலகில்
உயர்கவி எழுதப் பழகு!

முத்தமிழ் முல்லைக் காடே - அதில்
மொய்த்திடும் இன்பம் நீடே!
நித்தமும் என்றன் தாயே - என்
நினைவினில் இருப்பாய் நீயே!

3 commentaires:

  1. அருமை ஐயா... எங்கள் நினைவிலும் நீங்களே...

    நன்றி...

    த.ம.1

    RépondreSupprimer
  2. மயக்கும் வைர வரிகள் தாம் ஐயா.

    RépondreSupprimer
  3. அருமையான வரிகள் அய்யா. நன்றி

    RépondreSupprimer