mercredi 3 octobre 2012

நண்பா் விமலனுக்கு





என்றன் வலையின் பதிவுகளை
     இனிதே படித்த நன்விமலன்!
நன்றுன் வருகை! வரவேற்றேன்!
     நாளும் தொடா்க! கருத்திடுக!
உன்றன் பதிவை நான்படிக்க
     ஓடி வருவேன்! கவிதருவேன்!
இன்றென் பதிவாய் இக்கவியை
     இட்டேன்! நட்பு வளா்ந்திடவே! 

6 commentaires:

  1. /// எனது இனிய நண்பருக்காக ///

    தவறு.... இனி நமது இனிய நண்பர் விமலன் அவர்கள்...

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்

      நட்பாய் மணக்கும் வலைப்பூக்கள்
      நம்மின் நெஞ்சக் கண்ணாடி!
      சிட்டாய்ப் பறந்து வருகின்ற
      சிறந்த நண்பன் தனபாலன்
      பட்டாய்ப் படைக்கும் கருத்துரைகள்
      படிக்கப் படிக்க மனமினிக்கும்
      பெட்பாய் நாளும் வருகைதரும்
      பெருமைக் குரைத்தேன் நனிநன்றி

      Supprimer
  2. அருமை அய்யா...

    அழகாக கவி பாடுகிறீர்கள். கனக சுப்புரத்தின பாரதி தாசனைக் கண்டதில்லை. இனி தங்கள் கவியில் காணலாம் போல...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாவேந்தா் நற்பெயரை நானும் படைத்தேன்!என்
      நாவேந்தும் நற்றமிழை நன்கு!

      Supprimer

  3. நண்பா் விமலன் நறுந்தமிழ்த் தொண்டோங்கக்
    கொண்ட விருத்தம் கொழுங்கனியே! - உண்டு..நான்
    இன்புற்றேன்! ஈடில் எழில்பெற்றேன்! ஆரமுதாம்
    அன்புற்றேன் அந்தமிழில் ஆழ்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அன்பூற்றுப் பொங்ககவே! அந்தமிழில் சூழ்ந்துதினம்
      இன்பூற்றுப் பொங்குகவே! எந்நாளும் - நன்மனத்துள்
      பண்பூற்றுப் பொங்குகவே! பச்சைத் தமிழ்ச்செல்வா
      பண்ணுற்றுப் பொங்கிடவே பாடு!

      Supprimer