பூக்காடே! பொன்மழையே! அமுதே! தேனே!
புகழொளியே!
முன்பிறந்த மொழியே! தாயே!
வேக்காடே இல்லாமல் கிடந்த என்னை
விதிமாற்றி!
மதியூட்டி! வழியும் காட்டிப்
பாக்காடே படைக்கின்ற புலமை தந்தாய்!
பரிநகரே
வியக்கின்ற பெருமை ஈந்தாய்!
சாக்காடே கண்டாலும் என்றன் மீது
தமிழ்ப்பூக்கள்
பூத்தாடிக் கவிதைப் பாடும்!
15.10.2012
சாக்காடே கண்டாலும் என்றன் மீது
RépondreSupprimerதமிழ்ப்பூக்கள் பூத்தாடிக் கவிதைப் பாடும்!
அற்புதமான வரிகள் அய்யா.
மணக்கும் வரிகளை ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...
RépondreSupprimer//சாக்காடே கண்டாலும் என்றன் மீது
RépondreSupprimerதமிழ்ப்பூக்கள் பூத்தாடிக் கவிதைப் பாடும்!//
தமிழ்ப் பற்றை வெளிப்படுத்தும் வரிகள்
குறுங்கவிதை என்றாலும உவகைத் தோன்றும்-நல்
RépondreSupprimerகுற்றால அருவியிலே குளித்தல் போன்றும்
நறுங்கவிதை!குளுமையிலே நனைந்து போனேன்-நான்
நன்றியெனப் பாராட்டி வியக்க லானேன்
பூக்கள் போல தங்கள் கவிதைகள் மணக்கிறது...
RépondreSupprimerதங்கள் தமிழ்ப்பற்று அபாரம்...
ஓடையிலே என் சாம்பல் கரையும்போதும்
ஒன் தமிழே கரைய வேண்டும்...
பாடையிலே படுத்து ஊரைச் சுற்றும்போதும்
பைந்தமிழால் அழும் ஓசை கேட்க வேண்டும்...
என்ற அழகிய வரிகளை நினைவிற்கு கொண்டு வருகிறது...
RépondreSupprimerஇனிய தமிழை எழுதும் பொழுதெல்லாம்
கனியும் கணக்கின்றிக் காதல்! - பனிப்பொழிவில்
நெஞ்சம் நெகிழ்ந்தாடும்! விஞ்சிடும் கற்பனைகள்
கொஞ்சும் அணியாய்க் குவிந்து!