வினாதாலும்
விடுத்தலும்
தே+கொடி = தேங்கொடியா
தேன்+கொடி= தேங்கொடியா
வள்ளிமுத்து
வணக்கம்
அல்வழி,
வேற்றுமை ஆகிய இருவழிகளிலும் 'தேன்' என்ற சொல்லின் முன்னர் வல்லினமெய், மெல்லினமெய்,
இடையினமெய் என்னும் மூன்றும் வரின் இயல்பாகும்.
மெல்லினம்
வரின் 'ன்' இயல்பாதலே அல்லாது கெடும்.
வல்லினம்
வரின் 'ன்' இயல்பாதலன்றிக் கொட்டு, வல்லினமேனும் அதற்கினமான மெல்லினமேனும் மிகும்.
தேன்மொழி
மெய்வரின் இயல்பும், மென்மை
மேவின்
இறுதி அழிவும், வலிவரின்
ஈறுபோயி
வலிமெலி மிகலுமாம் இறுவழி
நன்னுால்
- 214
அல்வழி
தேன்
+ கடிது = தேன்கடிது
தேன்
+ மாண்டது = தேன்மாண்டது
தேன்
+ யாது = தேன்யாது
அல்வழியில்
மூவின மெய்களும் வர 'ன்' இயல்பாதல்
தேன்
+ மொழி = தேன்மொழி
தேன்
+ மொழி = தேமொழி
மெல்லினம்
வர அல்வழியில் 'ன்' இயல்பாதல், கொடுதல்
தேன்
+ குழம்பு = தேன்குழம்பு
தேன்
+ குழம்பு = தேக்குழம்பு
தேன்
+ குழம்பு = தேங்குழம்பு
வல்லினம்
வர அல்வழியில் 'ன்' இயல்பாதல், மிகுதல், மெலிமிகுதல்
வேற்றுமை
தேன்
+ கடுமை = தேன்கடுமை
தேன்
+ மாட்சி = தேன்மாட்சி
தேன்
+ யாப்பு = தேன்யாப்பு
வேற்றுமையில்
மூவின மெய்களும் வர 'ன்' இயல்பாதல்.
தேன்
+ மலர் = தேன்மலர்
தேன்
+ மலர் = தேமலர்
மெல்லினம்
வர வேற்றுமையில் 'ன்' இயல்பாதல், கொடுதல்.
தேன்
+ குடம் = தேன்குடம்
தேன்
+ குடம் = தேக்குடம்
தேன்
+ குடம் = தேங்குடம்
வல்லினம்
வர வேற்றுமையில் 'ன் 'இயல்பாதல், மிகுதல், மெலிமிகுதல்.
தேனென்னும்
சொல்லின் சிறந்த இலக்கணத்தை
வானென்னும்
வண்ணம் வடித்துள்ளார்! - மீனென்னும்
சொல்லும்
இயல்பும் மிகுதலுமாம்! துாயதமிழ்
வெல்லும்
உலகை விரைந்து
18.07.2016
Aucun commentaire:
Enregistrer un commentaire