சொல்லோவியம்
21.
தந்தான பாட்டிசைத்துத்
தைத்திங்கள் ஆடுதடா!
செந்தேனில் உன்னினைவு
சீர்கவிகள் பாடுதடா!
22.
போகியிடும் வைகரையில்
போதைதரும் உன்பார்வை!
ஏகிவரும் ஆசைகளை
இயக்குதடா உன்போர்வை!
23.
சல்லிக்கட்டுக் காளையெனத்
துள்ளிக்கிட்டுப் பாய்ந்தவனே!
அல்லிமொட்டுப் பேரழகை
அணுஅணுவாய் ஆய்ந்தவனே!
24.
மதுரைவீரன் சாமிபோல
மார்பழகு கொண்டவனே!
குதிரைபோல எனைத்தூக்கித்
கூத்தாடி நின்றவனே!
25.
மருதாணி வைக்கையிலே
மச்சான்..வோம் நெனப்புவரும்!
பெருசா..நீ பிளக்கின்ற
வெடிசிரிப்பு மகிழ்வுதரும்!
26.
பால்கறக்கும் பொழுதினிலே
படிச்சிடுவேன் வோம்பாட்டு!
மேல்கறக்க முடியாமல்
மேவுதடா வென்காற்று!
27.
காலையிலே பூத்திருக்கும்
கண்கவரும் டிசம்பர்..பூ!
ஓலையிலே பூத்திருக்கும்
ஒய்யாரப் பூசணிப்பூ!
28.
சாலையிலே பூத்திருக்கும்
தைமாதக் கோலப்பூ!
சோலையிலே பூத்திருக்கும்
தூண்டிலிடும் காதற்பூ
29.
புள்ளிவைச்சி கோலமிடும்
கள்ளிமனம் ஏங்குதடா!
துள்ளிவரும் காளையுனை
அள்ளிமனம் வீங்குதடா!
30.
சோளக்காட்டுக் கிளியிரண்டும்
சொக்குதடா உறவாடி!
மேளம்கொட்டும் திருநாளை
மேவுதடா மனமோடி!
(தொடரும்)
பூக்கள் மனதை கவர்ந்தன ஐயா... வாழ்த்துக்கள்...
RépondreSupprimerபெண்ணை இப்படியெல்லாம் ஏங்கும்படி ,திருமணத்தை தள்ளிப் போடக்கூடாது அவங்கப்பன் !
RépondreSupprimerஇதே கருத்தைத்தான்இன்றைய என் பதிவிலும் வலியுறுத்தியுள்ளேன் அய்யா !>>>>மகளே இப்படி கேட்கும்விதமா நடந்துக்கலாமா,அப்பன் ? http://www.jokkaali.in/2014/03/blog-post_8.html
த ம +1
வணக்கம் !
RépondreSupprimerதேன் சிந்தும் வார்த்தைகளைத்
தொகுத்தாய் நற் கவியாக..!!
நான் சிந்தும் வாழ்த்துரைகள்
நலம் சேர்க்க வேண்டுகிறேன் .
வாழ்த்துக்கள் ஐயா .
இன்பக் கவிகண்டேன்
RépondreSupprimerஇதயத்தில் பூப்பூக்க
மனதோடு மகரந்தம்
மணக்குதையா உயிர்தொட்டு !
சொல்லில் சிறந்த
சுடர்கவிகள் தருகின்றீர்
அள்ளிச் சுவைக்கின்றோம்
ஆரமுதாய் அகம்நிறைய !
காற்றுக்கும் வலிக்கின்ற
காதல் அழுகையெல்லாம்
காணாமல் போய்விடுமே
கவியரசே உம்வரியில் !
எண்ணி மகிழ்கின்றேன்
ஏகாந்தம் போக்குகின்றேன்
நண்ணிநான் வந்திங்கே
நலம்பெற்றேன் உம்வலையில் !
அருமையான சொல்லோவியம் படித்தேன் ரசித்தேன்
பயன்பெற்றேன் அண்ணா !
இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்
5
"சோளக்காட்டுக் கிளியிரண்டும்
RépondreSupprimerசொக்குதடா உறவாடி!
மேளம்கொட்டும் திருநாளை
மேவுதடா மனமோடி!" என்ற
அடிகளை விரும்புகிறேன்!
அருமையான கவிதுளியை
RépondreSupprimerஅருந்தியே மெய்மறந்தேன்
விரும்பியே வடிகின்ற
வன்கவியே வியக்கின்றேன்!
வாழ்க வாழ்க!
RépondreSupprimerதொல்லோ வியம்உண்டு! சொக்கிடச் செய்கின்ற
மெல்லோ வியம்உண்டு! மல்லா்போல் - வெல்லுகின்ற
வல்லோ வியம்உண்டு! வன்கவியே உன்போன்று
சொல்லோ வியம்உண்டோ சொல்?